பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியமும் மலையாளமும்

திரு. மா. இளையபெருமாள் திருவனந்தபுரம்

பண்டைத் தமிழகத்தில் சேரநாட்டுச் சங்கத் தமிழாக விளங்கிக் கி. பி. 12-ம் நூற்றண்டளவில் பிரதேச வழக்கின் தனித்தன்மை காரணமாக மலைநாட்டுத் தமிழாகச் சிறிது திரிந்து, மிதமிஞ்சிய வடமொழிக் கலப்பால் கி. பி. 14-ம் நூற்றாண்டளவில் மணிப்பிரவாளமாக மாறி கி. பி. 16-ம் நூற்றாண்டளவில் மலையாண்மையாக மாறி இன்று தனி மொழியாக விளங்குகின்றது மலையாளம். இம்மாற்றத்தின் அடிப்படை பற்றிய உண்மையை நம் முன்னேர் நூற்களில் காண்கிருேம். தொல்காப்பியரின்

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம்குறிப் பினவே திசைச் சொற் கிளவி”

என்பது முதலிற் குறிப்பிடற்குரியது. இப்பன்னிரு நிலங்களுள் இன்றைய எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை ஆகிய மாவட்டங்களும், கொல்லம் மாவட்டத்தில் ஒரு பகுதியும் அடங்கிய குட்டநாட்டையும், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களும், கோழிக்கோடு மாவட்டத்தின் ஒரு பகுதியும் அடங்கிய குடநாட்டையும், கண்ணுார் மாவட்டத் தில் கடலோரப் பகுதிகளும், கோழிக்கோடு மாவட்டத்தின் ஒரு பகுதியும் அடங்கிய பூழி நாட்டையும், இன்றைய வயநாடு கூடலூர் முதலிய மலைப்பகுதிகளும் அடங்கிய கற்கா நாட்டையும்" உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தாயைத் தள்ளை என்பார் குட்டநாட்டார், தந்தையை அச்சன் என்பார் குடநாட்

203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/211&oldid=1405065" இலிருந்து மீள்விக்கப்பட்டது