பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின் இலக்கியத்துறை முழுவதிலும் பேச்சுமொழி இலக்கியத் திற்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருப்பதைக் காண்கிருேம். வங்காளத் தில், கவி தாகூரின், . பாமரமொழி இலக்கியம் அடைந்த புகழ் நாம் அறிந்த ஒன்று. சிறந்ததும் உயர்ந்ததுமாய் விளங்கிய "சாதுபாஷா” இலக்கிய மொழியை விடுத்து, அவர் எல்லோருக் கும் புரியும்படியான சாலித்பா ஷா எழுதிச் சிறந்தார். இது upg), L13A5(3.55, Gura, “Once having adopted the new style for public & private purposes, Tagore never went back to the old, and as time passed, more and more writers of the younger genera tions were won over by his examples” or 63rg Gjøvol%) flogit. மேலே நாடுகளில், சாமர் சாட் மாம், மாப்பசான், உழவர் மொழி காட்டும் தாமஸ் ஹார்டி, பி. ஜி. உட் ஹவுஸ் ஆகியோர் இலக்கியத்தில் பேச்சுமொழிக்குச் சிறந்த இடம் தரும், புகழ் மிக்க எழுத்தாளர்கள், எரிக் ராண்டல் எழுதிய காதல் கதை (Love Story) முழுமையும் பேச்சு மொழியாய் அமைந்தும் உலகப் புகழ் அடைந்து விளங்குகிறது. இன்றைய அமெரிக்க எழுத் தாளர்களில் பெருபாலோர் வாழ்க்கையை அப்படியே விளக்குவ தாகச் சொல்லிக்கொண்டு, பேச்சு மொழி நடையிலேயே எழுதி வருகின்றனர். ஆகவே இன்றைய சமுதாயம் பேச்சுமொழி இலக்கியங்களை வரவேற்கிறது என்பது வெளிப்படை. இந்த வரலாற்றிற்கொப்ப, நம் மொழியிலும் இன்று பேச்சு மொழி இலக்கியங்கள் பெருமளவில் உருவாகி வருகின்றன. காலப் போக்கில், இது தொடர்ந்து வரும் ஒரு நிகழ்ச்சியென்றலும், நாம் அறிந்தவரை, இலக்கியத்தில் பேச்சுத் தமிழ் இந்த அளவு எக்காலத்தும் எழுந்ததில்லே. எந்த ஒரு நூற்ருண்டில் இன்று போல் பெருமளவு எழுந்து, தொடர்ந்து வரும் இலக்கிய மொழி வளர்ச்சிக்கு ஒரு இடையூறு போல் விளங்கவில்லை. இலக்கியத் தில் இந்த மாறுதல், செய்தித்தாள், வானுெலி, திரைப்படம் என்ற சமுதாயத் .ெ த | ட ர் பு வழிகளிலெல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர் கிருேம். ஆகவேதான் எழுகிறது. இந்த வின, இலக்கியத்தில் பேச்சுமொழி தேவைதான? பேச்சு மொழி இலக்கியங்கள் இவ்வாறு பெருகிவரக் காரணம் என்ன என்பதை இப்போது காண்போம். 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/220&oldid=743347" இலிருந்து மீள்விக்கப்பட்டது