பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) இலக்கியம், முன் புபோல் சில தனி மனிதர்களின் உரிமைப் பொருளாக இல்லாது, சமுதாயச் சொத்தாக மாறிவருகிறது. (2) கற்றேர் எண்ணிக்கை மிகுதிய க, மிகுதியாக, வகை வகையான வட்டார மொழிகளில் எழுதுகின்ற உரிமையும் பரவி வருகிறது. (3) உள்ளது கூறல்” என்பது இன்றைய இலக்கியத்தின் தலை யாய குறிக்கோளாக இருப்பதால், உள்ளதைக் கூறும் பொழுது, உண்மையான மொழிவடிவத்தை, அன்ருட வாழ்வு மொழியை விளக்க வேண்டியதாகிறது. இனி, இலக்கியத்தில் பேச்சுமொழி பரவுவதல்ை ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி ஆராய்வோம். நன் மைகள் : 1. மொழியின் இயல்பை, அதன் கிளே மொழிகள் உட்பட, உள்ளபடி விளக்குகிறது; 2. இன்றைய சமுதாயத்தை, அதன் குறை, நிறைகளோடு, அதன் உண்மையான பேச்சு மொழித் தன் மையுடன் இருட்டடிப்பு செய்யாது எதிர்காலத்திற்குக் காட்டுகிறது , 3. இலக்கியமொழி, புரியாததாக, புதிராக, வியந்து விலகும்படி யில்லாது, புரியும்படியாக எளிமையாக ஏற்றுச் சுவைக்கும்படி மாறுகிறது; 1. இலக்கிய உறுப்பின ராகப் படைக்கப்படும் உரிமை எல்லோருக்கும் கிடைக்கிறது. (முன் பெல்லாம் கதைத்தலைவன் என் ருல் அவன் இலக்கியத் தமிழ் பேசுபவனுகத்தானே இருக்க வேண்டும்?); 5. மாவட்ட பேச்சு மொழி இலக்கியங்களிலிருந்து பொதுத் தமிழுக்கு மொழி வளம் சேர்கிறது; 6. படைப்புப் பணியில் பலரும் பங்குபெற முடிகிறது; 7. மாற்றமில்லையெனில், மொழி வளர்வதில்லை” - ஆகையால், மொழி வளர்ச்சி சிறக்கிறது. தீமைகள் : 1. வட்டாரமொழி வளர்ச்சி, பொது மொழியை மிக விரை வில் பல மொழிகளாக்கிவிடும்; 2. கற்போருக்கு உடனே புரியாதபடி ஒரு மொழித் தடை ஏற்படுகிறது. (சான்று;- "வேய் சாயிப்பே சரியான ஆளு வேய் நீரு. நேற்று நம்மளெ கொமச்சுப் 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/221&oldid=743348" இலிருந்து மீள்விக்கப்பட்டது