பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மக்களே போல்வர் கயவர் அவரன் ன ஒப்பாரி யாம் கண்டதில்’ அவர் அன்ன ஒப்பாரி என்பதற்குப் பரிமேலழகர் அவர் மக்களே யொத்தார் போன்ற ஒப்பு என்றெழுதுவதால், ஒப்பாரி' என்ற சொல் ஒப்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதென்றே அவ் வுரையாசிரியர் கருதுகின் ருர் என்று கூறலாம். கடவு ளேக் கடலுள்ளெழு நஞ்சுண்ட உடலுளானே ஒப்பாரி இலாதவெம் ’ என்ற இடத்து அப்பர் அடிகள் ஒப்பாரி' என்ற சொல்லே ஒப்புப் பொருளில் எடுத்தாண்டுள்ளார் - இறைவனுடைய பெரு வீரத் திற்கு ஒப்பு இல்லே’ என்பது கருத்து. திருவள்ளுவராற் கையாளப்பெற்ற இச்சொல் பன்னுாருண்டுகளுக்குப் பிறகு, பழுத்த தமிழ்ப் புலவராகிய அப்பராற் கையாளப்பெற்றுப் புது வாழ்வு பெறுகிறது. 1.4. சிவன் என்ற சொல் சிவபிரானேக் குறிக்கும் சொல் ஆகும். இதனை Siva என்ற வடசொல்லாக் க ம க க் கருது வார் உளரேனும், அப்பர் இதனை அருந்தமிழ்ச் சொல்லாகவே கொண்டு பாடியுள்ளார். சிவ(த்தல்), என்ற வினேயடியாகப் பிறந்த சொல்லாகவே இது கொள்ளப்பட்டுள்ளது. சிவன் எனும் நாமம் தனக்கே உடைய சென் மேனி எம்மான் ’’ என்ற இடம் இக் கருத்தை இனிது விளக்குவதாக அமைந் துள்ளது. சிவன்’ என்ற சொல் 66 இடங்களிலும், ஆர் விகுதி யுடன் சேர்த்து 5 இடங்களிலும் அடிகளால் ஆளப்பட்டுள்ளன. 'சிவந்தான் என்றும் ஓரிடத்துச் சிவனே க் குறிப்பிட்டுள்ளார். சடையின ச் செஞ்சடை என்றும், தீவனத்த செஞ்சடை' என்றும், கூறி மகிழ்வதுடன், “சுடர்' என்றும் 'சோதி’ என்றும் “செம்பொன் சோதி’ என்றும் கூறுவர் அடிகள். எண்ணற்ற இடங்களில் பெரொளிப் பிழம்பாக உள்ள பெருமானப் போற்றி யுள்ளார். சிவ பரம் பொருளின் செவ்வொளிக் காட்சி அனுபவம் உடைய அடிகள், இச்சொல்லே இவ்வாறே கொண்டு உணர்த்தி யுள்ளார் என்பது அறியத்தக்கது. 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/226&oldid=743353" இலிருந்து மீள்விக்கப்பட்டது