பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வச் சிலையார் உரைத்திறன் டாக்டர். இராம. சுந்தரம் அண்ணும8லப் பல்கலைக்கழகம் தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர் அறுவருள் தெய்வச்சிலேயாரும் ஒருவர். பல நூற்பாக்களுக்கு இவர் எழுதி யுள்ள உரைக்குறிப்புக் கள் பிற உரைகளினின்றும் வேறுபட்டு நிற்பதுடன், பொருத்தமாகவும் இலங்கக் காணலாம். தர்க்கம், சுற்றி வளைத் தல், மாட்டேறு, சொற்சிதைவு, இவற்றில் இறங்கா மல் இலக்கண உணர்வோடு, நேரடியாக உரை எழுதிச் செல்லும் இயல்பு இவரிடத்தில் காணப்படுகிறது. தமிழின் வாக்கிய அமைப்பு, சொல்லமைப்பு, இலக்கண ஆசிரியர் தம் கொள்கை என்பனவற்றில் கருத்துச் செலுத்திப் பல நூற்பாக்களுக்கு இவர் உரைவகுக்கிருர். இவ்வுரையின் நிறை குறைகளே இக் கட்டுரை யில் முழுதும் சுட்டமுடியாது. அவை ஒரு நூலாகும் தன் மைய. சில காட்டுக்கள் மட்டும் ஈண்டுக் காட்டப்படும். சொல்லிலக்கண ஆராய்ச்சி எங்கு தொடங்கவேண்டும்? அதன் பயன் என்ன? இவ்விரண்டையும் குறித்த அவர்தம் கருத்து ஆழ்ந்த கவனத்துக்குரியதாகும். “பொருளுணர்த்து தற்குச் சிறப்புடையன தொடர்மொழி என்று கொள்க. என் னே சிறந்தவாறு எனின், சாத்தன் என்ற வழிப் பொருண்மை மாத்தி ரம் உணர்த்துதல் அல்லது, கேட்டார்க் கொரு பயன்பட நில்லா மையின், சாத்தன் உண்டானெனப் பயன் பட வருஉம் தொடர் மொழியே பொருள் இனிது விளக்குவதென் க. சொல்லிலக்கணம் அறிந்ததனுற் பயன், தொடர் மொழியாகிய வாக்கியத்தினைப் பிரித்துப் பெயர்ச்சொல், வினேச்சொல், இ ைடச்சொல், உரிச் 3229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/237&oldid=743365" இலிருந்து மீள்விக்கப்பட்டது