பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மை ஆராய்வார்க்குப் பெயர்ச்சொல் என்ருயிற்று. அதன்ை இருபகுதிய சொல் நிலைமை என்றவாறு ” ஹெம்சிலாவ் என்கிற மொழியியல் பேராசிரியர் ஒரு சொல் (sign), சொன்மை (Form), பொருண்மை (substance) என்ற இருபகுதிகளே உடையது என்று ஒரு கோட்பாட்டை வலியுறுத்தித் தன் ஆய்வை நடத்துவார். அக்கோட்பாட்டோடு இவ்வுரைக் கருத்து ஒத்திருப்பதைக் காணலாம். பிறர் உரைகளில் இது காணப்படாததோடு, அவை எல்லாம் மேம்போக்கானதாகவும் அமைந்துவிடக் காண்கிருேம். வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல’ என்ற நூற்பா உரையில் உலகம் உவப்ப எனத் தொடங்கும் பாடல் வரிகளை ஒட்டிக் காட்டி, எல்லாத்தொகையும் ஒரு சொன்னடைய’ என்ற கருத்தை விளக்குவது, மொழியமைப்பை அவர் எவ்விதம் புரிந்து கொண்டுள்ளார் என்பதை நன்கு எடுத்துக்காட்டும். இன்றைய மொழியியலார் மேற்கொள்ளும் தழுவு தொடரன் ஆய்வோடு (immediate constituent analysis) @g 62.5g, Bléââ assrooroorth. வேற்றுமை மயங்கியல் 28 வது நூற்பாவுக்கு இவர் வகுத்த உரைச் சிறப்பையும், பத்து வகை எச்சங்கள் பற்றிய இவரது கருத்துத் தெளிவையும்' குறிப்புவினேகுறித்த இவரது சிந்த&னப் போக்கையும் விளக்கும் கட்டுரைகளில் அவற்றைக் கண்டு தெளிக. இன்னும் பல செய்திகளே விரிவஞ்சி இங்குக் காட்ட வில்லை. சில சொற்களுக்கு இவர் தரும் இலக்கணக் குறியீடு அச் சொற்களின் தொழின் மையை (function) மனத்தில் கொண்டு அமைகிறது. கிளவி. 2 வது நூற்பாவில் காணப்படும் சிவணி’ என்ற சொல்லை எல்லோரும் (கல்லாடர் தவிர்த்து) வினேயெச்சம்' என்ெ கருதுவர். இவர் அதனை ஒடுப்பொருண்மை தரும் சொல்லாகக் கருது வார். சிவணி என்பது வினே எச்சமன்று; ஒடுவின் பொருண்மை தோன்ற வந்தது, தாயொடு கூடி மூவர் என்ருற் போல . சிவணி’ என்ற சொல்லின் அமைப்பு வி&ன எச்ச அமைப்பு; ஆனல் அதன் தொழின் மை வேற்றுமைப் பொருண்மை தந்து நிற்கிறது என்பது இவர் கருத்து. செய்து. வாய்பாட்டு வினே எச்சம் தன் வினைமுதல் வினே கொள்ளும். ஈண்டு அவ்வாறு கொள்ளாமையே இவ்விளக்கத்துக்கு காரண மாக அமைந்திருக்க வேண்டும். 233

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/241&oldid=743370" இலிருந்து மீள்விக்கப்பட்டது