பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசவேசரும் திருநாவுக்கரசரும் திரு இரா. நடராசன் கோலார் தங்கவயல் பச வேசர் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் கன்னட நாட் டில் வாழ்ந்த வீர சைவப் பெரியார் ஆவார். இவர் கூடல் சங்கமத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறித்து வசனங் கள் என்று அழைக்கப்படும் கவிதை வடிவில் பல பாக்களைப் பாடியுள்ளார். அவர் தம் வசனங்களில் பாடியுள்ள கருத்துக்கள் பல நம் சைவசமயக்குரவராகிய திருநாவுக்கரசரின் கருத்துக் களுடன் ஒப்பு நோக்கத்தக் கன . தமிழ்ப்பெருமக்களாகிய உங்களுக்குத் திருநாவுக்கரசரைப் பற்றிக் கூறவேண்டிய தேவை யில்8ல. எனவே பசவே சரின் வரலாற்றைச் சுருக்கமாக க் கூறி அவர் திருநாவுக்கரசருடன் எவ்விதங்களில் ஒப்புநோக்கத் தக் கவர் என்பதைக் காண்போம். பசவே சரின் வரலாறு பச வேசர் தம் வரலாற்றை எழுதி வைக்கவில்லே. அவர் வரலாற்றை விளக்கும் நூல்கள் இரண்டு கன்னடத்தில் உள்ளன. அவை பீமகவி எழுதிய பசவபுராணம், அரிகான் எழுதிய பசவராச தேவ ரகளே என்பவை. அவ்விரண்டு நூல்களும் கி. பி. 14 ஆம் நூற்றண்டைச் சார்ந்தவை. பசவே சரது காலம் கி. பி. பன் னிரண்டாம் நூற்ருண்டாகும். அவர் இறையடியை அடைந்த காலம் கி. பி. 1167-68 என்பது மட்டும் எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன் ருகும். அவர் அருளிய வசனங்களே அவரது மனத்தைத் திறந்து காட்டக் கூடியன. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/25&oldid=743379" இலிருந்து மீள்விக்கப்பட்டது