பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறுகள் தெரிந்திருப்பது உறுதி. கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசரின் பாடல்களைப் படித்து அவர் மொழி பெயர்க்காவிடினும், திருநாவுக் கரசரின் கருத்துக்களே அவர் அறிந்திருக்கக்கூடும். சில இடங்களில் பெரியோர்கள் ஒரே தன்மையாக நினைப்பார்கள் என்ற விதிப்படியும் இருவரும் ஒரே கருத்தினைக் கூறியிருக்கக் கூடும். இரண்டு பெரியோர்களும் எ க் கருத்துக் களில் ஒத்தவராகின்றனர் என்பதைப் பற்றி இனி நோக்குவோம். 1. எல்லா உறவும் இறைவனே பசவே சர் வசனம் ஒன்றில் இறைவனே தாய், தந்தை, வேறு உறவினர், நண்பராக இருப்பதாக நவில்கின் ருர். தந்தே நீனு, தாயி நீனு பந்து நீனு, பளக நீனு நீ னல்லதே மத்தாரு இல்லவய்ய. கூடல சங்கம தேவ, ஹாலல்லத்து நீரல்லத்து பச வேசரின் வசனங்கள் - எல். பசவராசு - 280 இதே கருத்தை நம் திருநாவுக்கரசரும், அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையா யென் நெஞ்சம் துறப்பிப் பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத் தும் நீ இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே (தேவாரம் - அடங்கன் முறை. இரண்டாம் பாகம். மயிலே இளமுருகனர் பதிப்பு. பாட்டு எண்7173) என்னும் பாடலில் கூறியுள்ளார், 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/28&oldid=743412" இலிருந்து மீள்விக்கப்பட்டது