பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடையாளன் ஒருவன், தான் இயற்றும், ஒரு தவறுக்காக வீழ்ச்சியுறுவதைத் தமிழ்க் காப்பியங்களில் நாம் காண்கிருேம். அவனுடைய வரலாற்றைப் படிக்கும் போது அவன் பால் நமக்கு இாக்கம் மிகுகிறது. o அவர்கள் அமைத்திருக்கும் அவலச் சுவை மேட்ைடார் இலக்கணத்திற்குப் பொருந்துகிறது என்று கொள்ளுதலே ஏற் புடைத்து. நம் தமிழ்க் காப்பியங்களுக்கு இலக்கணம் தொல்காப் யமே யாகும். இளிவும், இழத்தலும், அசைதலும் வறுமை யும் என இந் நான்கு பொருள்பற்றி அவலம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுகிருர் (மெய். 6). இளிவு என்பது பிறரான் இகழப்பட்டு எளியன தல். இழவென்பது தந்தையும் தாயும் சுற்றத் தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல். அசைவு என்பது பண்டை நிலைமை கெட்டு வேருெரு வாருகி வருந்துதல்; வறுமை என்பது போகந்துய்க்கப்பெருத பற்றுள்ளம். இங்கனம் பேராசிரியர் இந்நான்கு பொருளுக்கும் உரை கூறுகிருர் . இவற்றுள் அசை வென்பது நாம் மேற்கூறிய அவல இலக்கணத்தைக் குறிப்பதாகும். அதாவது பண்டை நிலைமை கெட்டு வேருெருவாருகி வருந்துதல்’-இதற்கு இளம் பூரணர் தளர்ச்சி- அது தன்னிலேயிற்றழ்தல்’ என்று பொரு ளுரைக்கின்றர். உயர் நிலேயில் இருக்கும் சால்புடைய ஒருவனின் வீழ்ச்சியையே இது குறிப்பதாகும். இது அரிசுடாட்டிலின் அவல இலக்கணத்திற்கும் பொருந்து மாற்றை ஓர் க. சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவனகிய கோவலனும், சீவக சித்தாமணியில் காணும் சச்சந் தனும் கம்பராமாயணத்தில் ஒளிரும் இலங்கை வேந்தகிைய இராவணனும் அவல வீரர் களாவர். கோவலன் பெரும் புகழோடு விளங்குகிறன். 'கண்ணிஞல் கண்டு போற்றுதற்குரிய செவ்வேள்” என்று, பண்ணினும் இனிமையான மொழி பேசும் நங்கையர் அவனைப் பாராட்டு கின்றனர். கருணமறவன்'; 'செல்லாச் செல்வன்'; இல்லோர் செம்மல்: ;-இத்தகைய சீரிய பண்புமிக்க கோவலன் தன் அருமை மனே யாளே விடுத்து மாதவி என்னும் பரத்தையை 302

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/310&oldid=743447" இலிருந்து மீள்விக்கப்பட்டது