பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைந்து பல்லாண்டு வாழ்கின்றன், பண்பு மேம்பாடு மிக்க அவன் கற்பிற் சிறந்த தன் அன்பு மனையாளைப் பிரிந்து வாழும் தவற்றை அவன் எங்ங்னம் புரிகிருன் ? - இதனையே விதி’ என் கின்றனர். நாம் "அவலம்' என்போம். மாதவியோடு பல ஆண்டுகள் அவன் வாழ்ந்து அவளே விடுத்து மீண்டும் தன் மனைவியை அடைகிறன். தான் மாதவியோடு பல காலம் ஆரவார வாழ்க் கையில் ஈடுபட்டுத் , தன் முன்னேர்கள் செல்வத்தை யெல்லாம் இழந்ததும், இத்துணைக்காலம் தன் ஆருயிர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்ததும் பெருந்தவறு என்றுணர்கிருன். தான் செய்த தவற்றிற்காக அவன் உள்ளம் ஒத்துணை வருந்துகிறது என்பது புலகுைம். பின்னர், அவன் கவுந்தியடிகளை வணங்கி , செய்தவத் தீர், யான் நல்லொழுக்க நெறியி னின்றும் பிறழ்ந்து , மலர் போலும் மேனியுடைய கண்ணகி நடுங்கு துயரெய்த, முன்னம் உணராத நாட்டின் கண் கடத்தற் கரிய வழிகளில் அலேந்து வருந்தி இழிவுற் றேன். என்று தான் செய்த தவற்றினை எண்ணி மனம் வருந் திக் கூறுகிருன் , அடுத்து, ஆயர் சேரியில் மாதரி இல்லத்தில் கண்ணகி உணவாக்கிக் கோவலனை உண்பித்த பிறகு, அவளே நோக்கி, ' இருமுதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுது குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன். வழு வெனும் பாரேன் ” என்று சொல்லி வருந்து கிருன். அவல நாடகத்திலோ அல்லது காப்பியத்திலோ அழிவுத் தன்மை நெருங்கு தற்கு முன்பே தலைவன் தன் தவற்றை யுனர் வான ல்ை அவ்வழிவிலிருந்து தன் னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அழிவு நெருங்கிய பிறரு தன் தவற்றை உணர்கின்ற த8லவன் அவ்வழி வினே த் தவிர்க்க இயலாது. அவலத் தலைவன் தன் தவறுனர் த லேக் கிரேக்க மொழியில் அனெ க் ஆரிசி ஸ்’ (ancgnorisis) என்பர். இங்குக் கோவலன் அழிவு நேர்வதற்கு முன்பே தன் தவற்றை உணர்கிருன். இதல்ை தனக்கு நேரும் 303

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/311&oldid=743448" இலிருந்து மீள்விக்கப்பட்டது