பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடிக் கீழ் வீழ்ந்து கிடக்க எத் துனேயோ நங்கைமாருண்டு. அத்தகையவன் மற்ருெருவன் மனே வியின் பால் உள்ளத்தைப் பறி கொடுத்தது அவலத்திற்குரியதாகும். நேருக்கு நேர் போர் செய்து மாற்ருன் மனேவியைக் கவர்ந் திருப்பின் , ஒருவேளை அவன் வீரப் பண்பிற்குப் பழுதில்லாமல் அமைந்திருக்க லாம். வீரச்சிறப்பில் நிகரற்று விளங்கிய இராவணன், ஒர் அழகிய நங்கையைக் கள்ளத் தனமாகக் கவரும் இழி தொழிலேச் செய்த தன் காரணம் விதி' என்பர் கம்பர். ஆனல் இலக்கிய நுட்பத் தோடு நோக்குங்கால் இதுவே அவலமாகும். தான் உலகில் எது செய்தாலும் தன் னே யாரும் எதிர்த்துப் போரிட முடியாது என்ற ஆணவம் அவனிடத்தில் மிக்கிருந்தது. பல நல்ல பண்புகள் நிறைந்திருந்த அவனிடத்தில் இத்தகைய ஆணவம் மிக்கிருந்தது அவலத்திற்குரியதாகும் உடன் பிறந்தார் இடித் துரைத்தும் திருந்தாது, இராமன் அம்பிற்கு இரைய கும் இராவணனின் நிலே இரங்கத் தக்கதுதான் . இதுவரை நாம் கண்ட மூன்று அவல வீரர்களில் கோவலன் அழிவு நெருங்கு தற்கு முன் பல முறை தன் தவறுணர்ந்து வருந்தி யும் அவல்ை அழிவினின்றும் தப்ப முடியவில்லை. சச் சந்தன் அழிவு நெருங்கிய பிறகு தன் த வற்றினே உணர்ந்ததால் அவன் அழிவிற்கிரையாகிருன். இராவணன் , இறுதி வரை தனது தவற்றினே உணராமலேயே அழிவெய்து கிருன் வாழ்க் கையில் எத்து ணேப் பண்புகள் நிறைந்தவர்களாக வாழ்ந்தாலும், ஒரு தவறிழைப்பினும் அதல்ை பண்புடைய மக்கள் அழிவெய் தக் கூடும் என்றும் , அதல்ை தம் வாழ்வில் எச் சிறு களங்க மும் நேரா மல் விழிப்பாக இருத்தல் வேண்டும் என்றும் நாடகங்களிலும், காப்பியங்களிலும் படைக் கப்படும் அவல வீரர்களின் பாத்திரங் களின் வாயிலாகப் புலவர் பெருமக்கள் நமக்கு அறிவுறுத்து கின்றனர். 306

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/314&oldid=743451" இலிருந்து மீள்விக்கப்பட்டது