பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சலம்புணர் கொள்கைச் சலதி மாதவியா? புலவர். கு. திருமேனி தேசீயக் கல்லூரி, திருச்சி கோவலன் மாதவியோடு கடலாடச் சென்று, ஆடுங்கால் rைடல் கொண்டு ஊழ்பிரிப்பப் பிரிந்து கண்ணகியிடம் போந்து பேசுகின்ற போது, " சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக் குலம்தரு வான் பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நானுத் தரும் .......... சிலம்பு முதலாக ச் சென்ற கலனே டு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்... ' (9:66-76) என்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த உரையாடலை இளங்கோ குறிப்பிடுகின்றர். |" இவ்வரிகட்கு உரை கூறிய அடியார்க்கு நல்லார் “......எல்லாப் பொருளிலும் பொய்யை மெய்யாகப் பொருந்துவித் தொழுகும் பொய்த்தியோடும் கூடி ஆடிய ஒழுக்கத்தினனே நம் குலத்திலுள்ளார் தேடித்தந்த மிக்க நிதிக்குன்ற மெல்லாம் அவள் பொருட்டால் தொலேந்தன. அதல்ை இல்லாமை உண்டாதல் எனக்கு நாணத் தருகின்றது காண்” என்று கூறினன் என்றும் கூறி, சலம்-பொய்-சலதி-பொய்த்தி-ஆடுதல் உடனுடல். குலந் தரு வான் பொருள்-தொன்று தொட்டு வருகின்ற பொருள். இன்று நாணுத் தரும் என்றது. ‘கெட்டால் மதிதோன்றும்” என்னும் வழக்கு என்று எழுதியுள்ளார். 307

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/315&oldid=743452" இலிருந்து மீள்விக்கப்பட்டது