பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொருளிழந்து வறுமையுற்ற கோவலனே மாடல மறை யோன் செல்லாச் செல்வன் என்றதும், கோவலன் புகார் அகன்ற போது அருந்திறல் பிரிந்த அயோத்தி போல்” அவ்வூர் ஆயிற்று என்றும் ஏவலர் பலவிடத் துப் புகுந்து தேடினர்கள் என்று அடிகள் கூறுவதும் கேலி மொழிகளா? 5. வடு நீங்கு சிறப்பின் மனேயகத்தை மறந் தான் என்று கூறியவர் வந்து வந்து போகின் ருன் என்பதில் என்ன பொருளுண்டு? 6. கண்ணகியின் காற் சிலம்பைப் புகாரில் விற்க நானும் மனவுணர் வுடையான் ம&ன வியின் அணிகலன்களே நாளும் வாங்கிப் போகு ன் என்பதும் அவற்றை விற்றுப் பொருளாக்கி மாதவிக்குக் கொடுத்தான் என்றும் கோடற்குக் காரனம் ஒன்றில்லே . 7. கண்ணகியின் அணிகலன்களேக் கோவலன் நாளும் வாங் கித் தரப் பெற்று மாதவி வாங்கி அணிந் தாள் என் ருல் மாதவி ஒரு பொருட் பெண் டாகவும் பொருள் பறித்துண்னும் பேயாக வம் வாழ்ந்திருக்கவேண்டும். 8. மாதவி பொருட் பெண்டாக வாழ்ந்திருந்தால் ஊடலும் கூடலும் கோவனுக்கு அளித் திருக்கவேண்டாம், ஊடற் கோல மோடு இருந்தான் உவப்பப்பத்துத்துவரினும் முப்பத்திருவகை ஒமாலிகையினும் ஊறிய நீரில் மூழ்கி ஆர்வ நெஞ்சம்ொடு கோவலற் கெதிர்ந்து கோலம் கொண்டிருக்க வேண்டாம். பொருட் பெண்டாயின் பிரிந்த கோவலனுக்கு மடலுப்க்க வேண்டாம். மடலுய்த்தது பொருள் பெற என்ருல் அவன் வறுமை யுற்றதை அறியா திருக்க வேண்டும். 9. ஏவலர் சூழ் தர அத்திரி இவர் ந்து பேரணி அணிந்து சென்றவனே அவள் வறியவன் என்று நினைத்தது எங் வனம் ? கடிதத்தின் வழி அவனே வரவழைத்து அவன்பாலுள்ள மதாணி போன்ற அணிகலனையோ அன்புக் கண்ணகி பால் எஞ்சிய சிலம்பையோ பெறமுயன் ருள்போலும். 309

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/317&oldid=743454" இலிருந்து மீள்விக்கப்பட்டது