பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னுடும் சிவநெறியும் எந்நாட்டவர்க்கும் இறைவனுகிய கடவுளேத் தென் றமிழ் நாட்ட வர் சிறப்பாகச் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது, " தென் குடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ” எனவரும் திருவாசகத் தொட ரால் நன்கு புலனும். தொல் காப்பியம், திருக்குறள், சங்கத்தொகை நூல்கள் முதலிய பழந் தமிழ் நூல்களே ஆராயுமிடத்து உலகு உயிர், இறை என்ற முப்பொருளுண்மையைப் பற்றியும் அறிவுடைய நன் மக்கள் இறைவனருளால் உலகம் நலம்பெற வகுத்துக் கொண்டொழு கிய ஒழுக்க நெறியாகிய வாழ்க்கை முறையைப் பற்றியும் அறிந்து கடைப்பிடித் தற்குரிய சிறந்த உண்மைகள் ஆங்காங்கே குறிப்பிடப் பெற்றுள்ளமை காணலாம். மாயாவாதமும் வைதிக சைவமும் சங்கரர் காலத்திற்குப் பின் தமிழகத்தில் மாயாவாத மென் னும் ஏகான்ம வாதக் கொள்கை விரைந்து பரவத் தொடங் கியது அந் நிலேயில் திருவா கம் முதலிய திருமுறை களின் ஆற்றலால் அக் கொள்கை தமிழகத்தில் வலுவிழந்து நலிவுற் றது. எனினும் வியா சரது வேதாந்த சூத்திரத்தினேப் போற்றும் வைதிகர் சிலர் அக்கொள்கைக்கு வேத உபநிடதங்களில் ஆதர விருப்பதாக வாதித்து வந்தனர். வேத உபநிடதங்களேக் கூர்ந்து ஆராயும்போது, வேதத் தின் பயனு கத் திகழ்வது சைவசமயமே என்னும் உண்மையினே, திருமுறையாசிரியர்கள் தெளிய விளக்கிஞர்கள். வேதப்பயனும் சைவம் என்னும் மெய்ம்மையினே உணர்த்தும் திருமுறைகளின் பயன கத் தோன்றிய வை சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்களாகும். வேதம் பசுவா கவும், சிவாகமம் பாலாகவும், நால்வர் ஒது தமிழாகிய திருமுறைகள் நெய்யாகவும் அமைய அந்நெய்யின் 3.14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/322&oldid=743460" இலிருந்து மீள்விக்கப்பட்டது