பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுசு வையாக அமைந்ததே மெய்கண்டார் அருளிய சிவ ஞான 曹 போத மாதலே வேதம்பசு என்ற பழம்பாடல் உணர்த்துகிறது. சிவ ஞான போதம் = கி. பி. 13-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த மெய்கண்டார் தமிழரின் தொன் மைச் சிவநெறியினே உணர்த்தும் முறையில் சிவாகமப் பொருளே விரித்துரைக்கும் சிவஞ ைபோதம் என்னும் தமிழ் முதனூலே இயற்றினர். இந்நூல் சிவாகமங்களின் ஞான பாதப்பொருளே ஆராய்ந்து வரையறுத் துப் பொருள் துணிபு உணர்த்துதலின் சிவஞான போதம் என்னும் பெயர்த் தாயிற்று... சிவஞான போத அமைப்பு சிவஞான போ தம், பன் னிரு சூத்திரங்களால் இயன்றது கருத்தும் மேற்கோளும் ஏ துவுமுடையதாய்த் திகழும் இந்நூலின் முதன் மூன்று சூத்திரங்கள் பதி, பசு, ப. சம் என்னும் முப்பொருள் களின் உண் மைக்குப் பிரமாணம் கூறுவன . 4, 5, 6- ஆம் சூத்திரங் கள் அவற்றின் இலக் கன முணர்த்துவன. 7, 8 9-ஆம் சூத்திரங் கள் உயிர்கள் பாசத் தினே கி யாழித்துச் சிவபரம் பொருளே யடை தற்குரிய சாதனங் கூறுவன. 10, 11, 12-ஆம் சூத்திரங்கள் பாச நீக்க மும் சிவப்பேறுமாகிய பயன் கூறுவன. இவ்வகையால் இந் நூல் பிரமான இயல், இலக்கண இயல், சாதன வியல், பயணி யல், என நான் கியல்களேயுடையதாயிற்று. இவற்றுள் பதி, பசு, பாசமாகிய முப்பொருள்களின் பொது விலக்கண முணர்த்தும் முன் இயல்கள் இரண்டும் பொதுவதிகாரம் எனவும் அவற்றின் சிறப்பிலக் கணமுணர்த்தும் பின் இயல்கள் இரண்டும் உண்மை யதிகாரம் எனவும் வழங்கப் பெறும். திருமுறைகளே அடியொற்றிய திறம் இனி இந்நூல் திருமுறைகளே யடியொற்றியமைந்த திறத் தை ஒரு சிறிது நோக்குவோம். சைவத்திருமுறைகள் பன்னிரண் டாக அமைத்தமை போன்று இந்நூலிலுள்ள சூத்திரங்களும் பன்னிரெண்டாக அமைந்துள்ளன. பன்னிரு திருமுறைகளுள் திருஞான சம்பந்தர் முதன் முதல் திருவாய் மலர்ந்தருளிய 3.15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/323&oldid=743461" இலிருந்து மீள்விக்கப்பட்டது