பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடுடைய செவியன்’ என்னும் திருப்பதிகம் பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே எனப் பதியுண்மையினே விளக்கினுற் போன்று இந்நூலின் முதற் சூத்திரம் உலகிற்கு முதற் கடவுளுண்மையினை விளக்குகின்றது திருப்பெருந்துறை யில் இறைவனே குருவாக எழுந்தருளி உபதேசித்தருள அறிவினுற் சிவனேயாகிய மணிவாசகப் பெருந்த கையார் அருளிய திருவாசகம் எட்டாந்திருமுறையாகத் திகழ்வது போன்று இறைவனே குருவாக எழுந்தருளி உயிர் களுக்கு உபதேசித்தருள உயிர்கள் ஞானத்தினையுணரும் முறைமையினே யறிவுறுத்தலே விளக்கும் நூற்ப சிவஞானபோத த் தி ல் எட்டாஞ் சூத்திரமாக அமைந்துள்ளது. பன் னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்திற் போற்றப் பெறும் அடியார் செய்தி கஜளயுளங்கொண்டு தொண்டர் திருவேடத்தையும் திருக்கோயில் கஆளயும் சிவனெனவே தொழுது போற்றும் சீவன் முத்தர்களின் இயல்பினை அறிவுறுத்தும் நிலேயில் சிவஞானபோதத்தின் பன்னிரண்டாம் சூத்திரம் அமைந்துள்ளது. முதற் சூத்திரப் பொருளமைதி அவன், அவள், அது என்று பகுத்துரைக்கப்படும் உலகத் தொகுதி தோன்றுதல் , நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய முத்தொழிலுடைமையால் அஃது ஒருவினே முதலால் தோற்று விக்கப்பெற்ற உள்பொருளே எனவும், உள்பொருளாகிய உலகம், உயிர்களின் மலத் தீர்வு காரணமாகத் தான் ஒடுங்கு தற்குக் காரனமான கடவுளாலேயே மீளவும் தோற்றுவிக் கப்பெற்று நிலே பெறுவதெனவும், உலகிற்கு அந்தத்தைச் செய்து ஒடுக்கும் கடவுளே அதனைத் தோற்றுவிக்கும் ஆதியும் ஆவான் எனவும் அறிவுறுத்துவது ,

  • அவன் அவள் அதுவெ னும் அவை மூவினே மையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம், ஆதி என் மனர் புலவர் ” என வரும் சிவஞானபோத முதற் குத்திரமாகும். அவன், அவள், அதுவெனப் பகுத்துரைக் கப்படும் உலகத் தொகுதி தோன்றுதல், நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய மூவினை யினையுடைய தென் 3 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/324&oldid=743462" இலிருந்து மீள்விக்கப்பட்டது