பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய சில சிந்தனைகள் திரு. கு. தாமோதரன் வேங்கடவன் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்திற்கு இர ண் டாயிரமாண்டுகட்கு மேற் பட்ட வரலாற்றுச் சிறப்பு உண்டு. இத்தகைய நீண்ட வரலாறு உடையவை மிகச் சில மொழிகளே. நீண்ட பாரம்பரியம் இருந்தபோதிலும் நல்ல இலக்கிய வரலாற்று நூல் தமிழிலக்கியத் திற்கு இல்லை என்ற குறையும் உளது இலக்கிய வரலாறு எழுதும் துறையில் ஒருசிலர் முயன்றுள்ளனர். ஒரு சிலர் ஒரு சில காலப் பகுதிகளைக் குறித்துமட்டும் ஆய்ந்துள்ளனர். முழு இலக்கியத் ற்கும் சேர்த்து அதன் தோற்றமும் அது காலம் தோறும் பெற்ற மாற்றங்களும் பற்றி ஒரு நல்ல வரலாறு எழுதப்பெறவேண்டுவது இன்றியமையாததாகும். இலக்கிய வரலாற்று ஆசிரியனின் முதற்பணி இலக்கியப் போக்கில் ஒவ்வொரு நூலுக்கும் உரிய சரியான இடத்தை நிர்ணயிப்பதே ஆகும். இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட நூல்களுக்கிடையே உள்ள தொடர்பை ஆராய்வதும் இலக் கிய வரலாற்று வளர்ச்சியை அறிய உதவும் செயலாகும். இத்தகைய ஆராய்ச்சியில் நூலாசிரியர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சிகளே இணைத்து இடர்ப்படவேண்டுவதில்லே. வேறு ஒரு வகையான வளர்ச்சி, சில குறிப்பிட்ட இயல்புகளே எடுத்துக் கொண்டு அதாவது கற்பனை, இயற்கை வருண னே என்பன வற்றின் வளர்ச்சிபற்றி ஆராய்வது, மற்றெருவகை. பாடல் வகை 322

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/330&oldid=743469" இலிருந்து மீள்விக்கப்பட்டது