பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகும் என்கிறர். இது உண்மையாகவுமிருக்கலாம். ஆல்ை இதனை அடுத்து அந்நூல்களைப் பற்றி அவர் தரும் கருத்து அவர் உளப் பான்மையை நமக்குத் தெற்றெனக் காட்டிவிடுகின்றது. "சிந்தா மணியும் கந்தபுாரணமும் ஆண் அழகு உடையன; கம்பன் நடை பெண் நடை ; பெரிய புராணம் இருவகை நயமும் உடை யது அதனினும் இனிய சொன் ன டையிலமைந்த பெருங்காப் பியம் வேறுயாது மில்லே”, (பக் - 368) பேராசிரியர் கருத்து எப்படி இருந்த போதிலும் தனியன் களின் துணையும், வீர் சோழிய உரை யில் வரும் கம்பஞரிடைப் பெருமை உளது என்ற மேற்கோளும், கம்பன் காலக் கணிப்பிற்கே உதவலாம். - I - இரண்டாம் குலோத்துங்கன் பெரியபுராணம் பாடும் பணி யைத் தன் ஆசான் ஒட்டக் கூத்தருக்கு வழங்காது சேக்கிழா ருக்கு வழங்கியிருத்தல் கூடுமா என்ற ஐயமும் தோன்றியுள்ளது. வேறு பல நூல்களேக் குறித்துப் பாராட்டிப்பாடும் ஒட்டக் கூத்தர் பெரிய புராணத்தைப் பாராட்டாதது ஏன் என்ற கேள்வி எழுவ தும் இயல்பே. இவ்விரண்டிற்கும் ஏ ற் ற வி ைட ைய த் திரு ஏ. வி. சுப்ரமணிய அய்யர் இல்வாறு கூறுவர். 'திருத் தொண்டர் புராணத்தைப் பாடுவதற்குக் கூத்தரைவிடச் சேக் கிழார் பொருத்தமான வர் என்று சோழ அரசன் கருதி அவரை இந்தப் பணியாற்றும்படி வேண்டியிருக்கக் கூடும். இந்த விஷயத் தில் தம்மை அரசன் பொருட்படுத்தவில்லை என்ற காரணத்தால் ஒட்டக் கூத்தர் சேக் கிழாரையோ அவரது அரிய நூலேயோ குறிப்பிட்டுப் போற்றமலும் இருந்திருக்கக்கூடும்” (தமிழ் ஆராய்ச் சியின் வளர்ச்சி. பக் 203) இச் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு ஒரு வகையில் தாம் நிறைவு பெற வேண்டியுளது . திருமுறைகளைத் தொகுத்தவன் இராசராசன் என்பதே பலரும் கொண்டுள்ள கருத்து. ஆல்ை வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் முதல் இராசராசனுக்கும் முன்னரேயே முதல் ஏழு திருமுறைகள் தொகுக் கப்பெற்றுவிட்டன என்றும், அவை முதல் ஆதித்த சோழன் காலத்தில் (871-907) நம்பியாண் டார் நம்பியால் தொகுக்கப் பெற்றன என்றும் சான்று காட்டி எழுதுகின்ருர் (பி. சோ. சரிதம் பக்கம் 33). 3.25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/333&oldid=743472" இலிருந்து மீள்விக்கப்பட்டது