பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலகாலும் குறிக்கப்பெறும் ஐம்பெருங் காப்பியங்கள் பற்றி ஒரு கருத்து. நன்னூலுக்கு மயிலைநாதர் எழுதிய உரையில்தான் இத்தொடர் முதன் முதலாகக் காணப்பெறுகின்றது. அவரது காலம் 13 ஆம் நூற்றண்டு ஆகலாம். இக்காலத்திற்கு முன்னரே முன்னர் குறித்த பெரியபுராணமும் கம்பராமாயணமும் தோன்றி விட்டன. அவ்விரண்டையும் சேர்க்காது ஐம்பெருங்காப்பியம்’ அமைத்தது பெரிதும் வியப்பிற்குரியதாகவே உள்ளது. இதன் கண் இடம்பெருமற் போனமைக்கும், கவிதை நயம் அமைந்த சூளாமணி என்னும் காப்பியம் சிறு காப்பியக் குழுவில் சேர்க்கப் பெற்றுள்ளமைக்கும் உரிய காரணங்கள் புலப்படுமாறில்லை மேற் கூறியவாறே உள்ளது 96 வகைப் பிரபந்தங்கள் என்ற வழக்கும். பிற் காலப் பாட்டியல் நூல்களிலிருந்தே நாம் இவற் றின் சிலவகைளே அறிகின்ருேம். எண்ணிக்கையும் சரிவர அமையவில்லை. மற்றும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் கூட இவற்றுள் சேர்க் கப்பெற்றுள்ளன. 96 வகைப் பிரபந்தங்களும் சிற்றிலக்கியங்களும் ஒரே தன்மையான நூல் கஆளக் குறிக்கும். வெவ்வேறு பெயர்கள் என்ற கருத்துப் பாகு பாட்டை விட்டொழித்துக் காவியங்கள் என்றும் சிற்றிலக்கியங் கள் என்றும் மேற் கணக்கு கீழ்க் கணக்குப் போல வழங்குவதே சாலச் சிறந்ததன் ருே! இன்னும் ஒன்று. ஆறுபடை வீடுகள் என்ற ஆட்சிபற்றியது அது. மாயோனும் சேயோனும் தொன்று தொட்டு இந் நாட்டில் போற்றப்பெற்று வந்த கடவுளர் என்பதில் ஐயமில்லே. சிறப் பாகப் பரிபாடலில் இவ்விருவர் பற்றிய பாடல்களும் பல உள்ளன. திருமுருகாற்றுப்படை சேயோனைப் பற்றியதே. அதனே ச் சங்க காலத்தது என்று கொள்கின்ருேம். ஆறுபடைவீடுகள பற்றிய செய்தி அங்கு இல்லை. பரங் குன்றம், அலேவாய், ஆவிநன் குடி . ஏரகம், குன்று தோருடல், சோலேமலே ஆகிய இவ்வாறு பகுதி களில் ஐந்தாவது இடம் பல மலைகள் என்று பொருள்படுமேயன்றி ஓரிடமாமாறில்லை. அதனைக் கூறிய பின் ஆருவது இடமாகிய சோலமலையை ஆசிரியர் குறிப்பானேன்? இது பொதுவான இயல்புக்கு மாருக வன் ருே உள்ளது? சோலேமலே மாயோனுக் குரியதென மிகத்தெளிவாகப் பரிபாடலும் சிலம்பும் காட்டவும் 326

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/334&oldid=743473" இலிருந்து மீள்விக்கப்பட்டது