பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படியோ அது சேயோனுக்குரியதென்ற ஒரு கருத்துப் பல நாட்களாக வழங்கிவருகின்றது. அது என்று புகுந்தது ? படைவீடுகள் ஆறு, பிரபந்தங்கள் 96, காப்பியங்கள் 5, சங்கங்கள் 3 என்ற வழக்கை இலக்கிய வரலாற்ருசிரியர்கள் மாற்றிக் கொள்வது நலம் என்பது முதல் கருத்து. ஆராய்ச்சி அறிஞர் கற்ப&ன க் கதைகளே உண்மை என எண்ணிப்போற்றி யுரைக்காது ஒதுக்கித் தள்ள வேண்டுமென்பது இரண்டாவது கருத்து. மூன் ருவதாக நூல்கள் பற்றியோ புலவர் பற்றியோ கால ஆாாய்ச்சி செய்யும்போது தம் விருப்பு வெறுப்புக்களே அகற்றி நடு நிலையில் நின்று ஆராயவேண்டு மென்பதும், எவ்வ ஒாவு பெரிய அறிஞராயினும் ஒரு சார்புபற்றி உரைக் கும் கருத்துக் கட்கு இடம்தாலாகாது என்பதும் நினைவுகொளற்குரியன. நல்ல இலக்கிய வரலாற்றின் தன்மைகளே நினைவுகொண்டு எழுத முயலல் வேண்டும். பல்கலைக்கழக எம். ஏ. மாணவர் துணை கொண்டு மொழியாராய்ச்சி அடிப்படையில் எல்லா நூல்கட்கும் இலக்கணம் அமைத்து, அதன் துணைகொண்டு கால நிர்ணயம் செய்வது சாலச்சிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/335&oldid=743474" இலிருந்து மீள்விக்கப்பட்டது