பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுகுறிச் சிறப்புப் பெயர்கள் :

  • Cotton, Say, wood போன்றவை இன்னொரு வகை யான சிறப்புப்பெயர்கள். இவைகளே முறையே "பருத்தி”, “சொல்” மரம் என மொழி பெயர்க்காது காட்டன் ’, 'சே', "உட்டு” என்றே ஆளுதல் வேண்டும்.

இடுகுறிப்பெயர்கள் குறியீடுகள் கணக்கியலில் R என்பது ஒரு குறியீடு. அதன் மதிப்பு : என்பதையறிவோம். உலக மொழிகள் அனைத்திலும் உள்ளது போலவே R என்பதை ஒரு குறியீடாகத் தமிழிலும் கொள்ளல் ... I தகும். இயைபியலில் குறிப்பிடத் தக்கவை 92 தனிமங்களும் அவற் றின் கூட்டுப்பொருட்களுமே தொடக்கத்தில் தனிமங்களின் பெயர்கள் காரணம் கருதி வைக் கப் பட்டாலும் நாளடைவில் அப்பெயர்கள் இடுகுறிப் பெயர்களாகவே ஆகி வருகின்றன. என்ருலும் வெவ்வேறு மொழிகளில் தனிமங்களுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்காமலில்லே. இவ்வாறு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்களால் தனிமங்கள் வழங்கப் படினும் அவை களின் குறியீடுகே அனைத்து மொழிகளிலும் ஒன்ருகவே இருக் கின்றன. காட்டாக ச் செம்பு “Cu' என்னும் குறியீட்டாலும் 'இரும்பு Fe" என்னும் குறியீட்டாலும் குறிக்கப்படுவதைக் கூறலாம். எனவே இத் தனிமங்களின் குறியீடுகள் அனைத்தையும் தமிழிலும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளலாம். இவ்விதத்தனிமங் களின் கூட்டுப்பொருட்களுக்கும் பொருந்தும். இவ்வாறே பிற எல்லாத் துறைகளிலும் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீடுகளைத் தமிழிலும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளுதல் நன் மை பயக்கும். உலகப் பொதுக்கலேச் சொற்கள் பல கலைச் சொற்கள் உலகப் பொதுக் கலேச் சொற்களாக வழங்கப்படுகின்றன. அவைகளே அவ்வாறே ஏற்றுக் கொள்ள 333

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/341&oldid=743481" இலிருந்து மீள்விக்கப்பட்டது