பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்ரு கும். அதிகாரம் என்பது பல பொருளுணர்த்தும் ஒரு வடசொல் ஒரே பொருளேப் பல படியாக விரித்துக் கூறும் ஒரு சிறு பகுதியை அதிகாரம் என்ற பெயரால் வள்ளுவர் வழங்கு கின் ருர் . வள்ளுவர் பெருமான் அதிகாரம் என்ற பெயர் தந்து அதனுள் பத்துக் குறட்பாக்கள் கூறினர் என் ருல் அப்பத்துக் குறட்பாக்களும் ஒரே பொருளே விளக்குகின்றதன் ருே? எனவே அதிகாரப் பெயரை வைத் துப் பல குறட்பாக்களில் இன்றியமை யாத சொற் களேப் பரிமேலழகர் வருவித்துக் கொள்வர். 1-2 குடிசெயல் வகை என்னுமதிகாரத் தின் முதற்குறள் "கருமம் செயவொருவன்...... ( 1021) என்பது இக் குறளில் அமைந்த கருமம் என்ற சொல்லிற்குத் தன் குடி செய் தற்கு உரிய கருமம் என்று பொருள் வரைந்து விசேடவுரையில் 'குடி செய்தற்கு என்பது அதிகாரத் தால் வந்தது’ என்று குறித்தார். கருமம் என்பதற்குச் செயல் என்றே பொருள் ஆமாயினும் குடி செயல் வகை என்பது அதிகாரமாதலால் அதனேக் குறித்த செயலே ஆதல் வேண்டும் என்பது பரிமேலழகர் கொண்ட கருத்தாகும். 1-3 அதிகாரப் பெயரைக் கொண்டு சொற்களே வருவித் து எழுதும் போது பரிமேலழகர் அதிகாரப் பெயர் முழுவதனையும் வருவித்துக் கொள்வதும் உண்டு. அன்றியும் அதிகாரப் பெயரில் ஒரு பகுதியை மட்டும் வருவித்துக் கொள்வதும் உண்டு. “நல்ல வை யெல்லாம் தீமையாம்...(375) என்ற குறட் கண் ஊழான் என்றும் 'கட னறிந்து...”(687) என்ற குறட் கண் துாது என்றும் அதிகாரப் பெயர் முழுவதும் வருவிக்கப்பட்டுள்ளன. ஆனல் பிறன் பழி கூறுவான்...” (180) என்ற குறட் கண் புறங் கூருமை என்ற வதிகாரப் பெயரிலிருந்து ‘புறத்து’ என்ற சொல்லே மட்டும் வருவித்து உரை வகுத் தார். 1-4, சில விடங்களில் அதிகாரப் பெயரில் அமைந்த சொற் களே வருவிக்காது அதிகாரப் பெயர்க்குப் பொருத்தமுடைய வேறு சொற்கள் வருவிக் கப்படுதலேயும் காண்கிருேம். 'தீயள வின்றித் தெரியான்’ (947) என்னுங் குறட்பாவுரையில் தெரி யாமை வினேக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தால் 338

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/346&oldid=743486" இலிருந்து மீள்விக்கப்பட்டது