பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" துறை எனும் முறை ' திருமதி சோ. மீட்ைசி பாரதி மதுரைப் பல்கலைக் கழகம் இருபதாம் நூற்றண்டிற் கூட, இனியன என்று சுவைக்கப் படுவன் சங்க இலக்கியங்கள். அவற்றின் கருப்பொருன்ச் சுருக்கிக் கண்டால், அகம், புறம் என்ற இருபொருளே ஆம். அவ்விரண்டனையும் திணை, துறை என்று பாகுபடுத்தி சுவைக்கும் வழக்கமும் உள்ளது. -- to திணை என்பது ஒழுக்கத்தையும், துறைகள் என்பவை அவ்வவ் வொழுக்கத்தோடு தொடர்புடைய, பாற்படுத்திக் கூறக்கூடிய செய்திகளையும் குறிப்பதாகவே நாம் உணர்கிருேம். வெட்சித் திணை என்பது ஆநிரை கோடலானல் அதைேடு தொடர்புடைய போர் நிகழ்ச்சிகளைக் கூறல் அதன் துறைக ளாம். குறிஞ்சித் தின என்பது புணர்ச்சி ஒழுக்கமால்ை தலைவன் நலம் பாராட்டல் முதலிய அவ்வொழுக்கத்தோடு தொடர்புடைய செய்திகள் அத் திணையின் துறைகளாம். இப்பாகுபாடுகளேக் குறித்து, இவை பயின்று வரும் சங்க இலக்கியங்களின் இலக்கணம் அறிய உதவும் தொல் காப்பியம் யாது கூறுகிறது எனப் பார்க்க விழைவது இயற்கையன் ருே? பொருளதிகாரத்தின் முதலியலான அகத்திணையியலில், திணை, துறை பற்றிய விளக்கத்தைத் தொல்காப்பியம் கூறவில்லே. புறத்திணையியலில் ஒவ்வொரு புறத்திணையும் இத்தனை துறைப் படும் என்று மட்டுமே கூறுகிருர். தொடர்ந்து வரும் இயல் , - . * ..., To " " - so 341

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/349&oldid=743489" இலிருந்து மீள்விக்கப்பட்டது