பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிகத்திலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளாம். உரைசால் பத்தினியாக விளங்கிய கண்ணகியை உயர்ந்தோர் ஏத்தும் வண்ணம் செங்குட்டுவன் சிலே எடுத்தான் என்னும் செய்தி, வஞ்சி காண்டத்திலேதான் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. நூலுக்கே உயிர் நாடியாக - கருவாக - விளங்கும் இந்தச் செய்தியை மற்ருெரு புலவர் பாடிச் சேர்த்தார் எனக் கூறுவது ஸ்வாறு பொருந்தும்? பொருந் தாதே. அவ்வாறு கருதக் கூடாது என்பதற்காகத்தான் மேலே நாட்டு அறிஞர் ஒருவர் மிகத் தெளி வாகக் கீழ்க் காணுமாறு விளக்கம் அளித்துள்ளார். “The style and vocabulary of the work (The Ankle Bracelet) as we know it seem quite homogeneous and do not indicate multiple authorship.” 2 விளக்கம் பசுமரத்தாணி போல் அல்லவா அமைந்து விட்டிருக் கிறது! இதன் மூலமாக, இரண்டு காண்டங்களுடனே செய்திகள் முற்றுப்பெற்று விடுகின்றன என P. T. S. அவர்கள் குறிப்பிடுவது பொருந்தாத விளக்கமாகத் திகழ்வதைக் காணலாம். வஞ்சிக் காண்டமும் சேர்ந்தால் தான் - சேரன் செங்குட்டுவன் வரலாறும் ஒன்றுபட்டால்தான், நூல் முழுமையடையும் சிறப்பினேப் பெறு கிறது. எனவே பண்டைத் தமிழக வரலாற்றை (தென்னு ட்டு வரலாற்றை) அறிந்து கொள்ளுவதற்கு வஞ்சிக் காண் டமும் சேர்ந் தேதான் துணை செய்கிறது. தலையாய இந்தக் கருத்தைத் தெளி வாக உணர்ந்த நிலையில் தான் , - “It is indeed, a valuable mine of information for re-writing the history of the early Pāadya, Cóla and Céra Kings”. “These and several other things found mentioned are indeed valuable as throwing sufficient light on the history of the Tamils in the early centuries of the Christian era” —” (p.–70),

ைமற்ருெரு வரலாற்ருசிரியர் விளக்கம் கூறிச்சென்றுள்ளார்.

அரசர்கள், துறவியர், பெண்டிர் ஆகியோர் அவரவர்களுக்கு உரிய துறைகளிலே நேர்மை குன் ருதவர்களாக விளங்கில்ை

  • ..

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/35&oldid=743490" இலிருந்து மீள்விக்கப்பட்டது