பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் அந்தச் சொல்லாட்சிதானும் இல்லை. செய்யுளியலில் தான் ‘துறை என்பது பற்றிக் கூறுகிருர், ஆனல், செய்யுளின் உறுப்பான துறை என்பது பற்றி அவர் ஆண்டுக் கூறுகின்ற விளக்கம், அகப்புறத் திணைகளின் உறுப்பான துறைகளுக் குரியதாக இல்லே.

  • அவ்வம் மாக்களும் விலங்கும் அன்றிப்

பிறவவண் வரினும் திறவதின் நாடித் தத்தம் இயலான் மரபொடு முடியின் அத்திறம் தானே துறையெனப் படுமே ’ என்கிருர். இவ்விளக்கம் திணைகளின் உறுப்பான துறைகள் பற்றியது அன்று; இரு பொருட்கும் பொருந்துவதும் அன்று: கருப்பொருள்கள் மயங்கிவரினும் மரபொடு முடிப்பது பற்றிக் கூறு மிது அகப்பொருட்கே உரியது. வற்றை நோக்குங்காற் சில ஐயங்கள் எழுகின்றன. றறை நோக கு so 33 (ԼԶ 1. தொல்காப்பியர் ஏன் திணை, துறை பற்றிய விளக்க மேதும் கூறவில்லே ? 2. துறை பற்றி மட்டும் கூறுபவர், அதனைச் செய்யுளியலில் அகத்திற்கு மட்டுமே பொருந்துமாறு கூறியதேன்? 3. அவ்வாறனல் அகப்புறத் திணை, துறைகள் வேறு, இத்துறை வேரு? இவ்வையங்கட்கு விளக்கம் காணப்புகுங்கால் வேருேர் உண்மை வெளியாகிறது. தொல்காப்பியர் யாண்டும், அகப் பொருளுக்குத் துறை பாகுபாடு கூறவேயில்லே . அகத்தினே, புறத்திணை, புறத்துறை மூன்று மட்டுமே கூறுகிறர். அகத்தினைப் பாகுபாடுகளாக முதல், கரு, உரி என்ற மூன்றே கூறுகிரு.ர். உரிப் பொருளின் விரி கூறுகிருர் . புறத்தினேயியலின் ஒவ்வொரு நூற்பாவிலும் இத்தனே துறைத்து’ என்று வரையறுத்துக் கூறுபவர் அகத்திணை பற்றிய ஐந்து இயல்களிலும் அச்சொல்லே ஆளவே இல்லே. 342

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/350&oldid=743491" இலிருந்து மீள்விக்கப்பட்டது