பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து ள் ஒன்றன. தியானம் என்ற தலைப்பில் திருமந்திரம் சாகாக் கலேக் கு உரிய சா தனத்தைக் கூறுகின்றது நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லே மனேக்கும் அழிவில்லே என வும் நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்(டு) உயர் விழா வாயுவை உள்ளே அடக்கித் துயர் அற நாடியே துாங்க வல்லார்க்குப் பயன் இது காயப் பயமில்லே தானே என வும் சாகாக் கலே பேசப்படுகிறது. சைவ சமய குரவர்களாகிய நால்வரும் வைணவ ஆழ்வார் களிற் சிலரும் சாகா நிலை பெற்றவர்கள். அவருள் மணி வாசகப் பெருமான் சாகாக்கலயை வலியுறுத்திப் பாடுகின் ருர். “செத்தே போனுல் சிரியாரோ” என்று வினவிய அப் பெருமானது அழி தரும் யாக்கையை அளிதரும் யாக்கையாகச் செய்தான் ஆண்டவன். அற்புதமான அமுத தாரைகளே அந்த அன்புருவத் தின் எற்புத் துளை தொறும் ஏற்றி அடிகட்கு அள்ளுராக்கை அமைத்தன ன். இதனை வள்ளற் பெருமான் அருளுருவம் என்று கூறுவர். இத் திருவுருவ த்துட ன் வா தவூரடிகள் கண் மாறல் யானுங் கண்டேன் காண்க சிவனென யானுந் தேறின ன் காண்க எனப் போற்று வாராயினர். இத்திருமேனியில் இருந்து தான் தில் ஆலயம்பலத்திலே மணிவாசகப் பெருமான் ஞானதேகம் பெற்று வான் கலந்தார். இதனை ‘மெய்யுணர்ந்த வாத ஆர் மலே யைச் சுத்த வெளியாக்கிக் கலந்து கொண்ட வெளியே” என்று வடலூரடிகள் பாடுகின்றனர். சாகாக்கலேயை வீரசைவ ஆதீனத் தலைவர்களாகிய குமார தேவர் முதலானேர் விரித்து ஒதியுள்ளனர். மற்றும் கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி ஆகிய சித் திகளைப் பெற்ற தவ முதல்வர்களாகிய சித்தர்கள் சாகாக் கலேயை விரித்துக் 345

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/353&oldid=743494" இலிருந்து மீள்விக்கப்பட்டது