பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் தானுக நிற்றல்’ எனும் ஆன்ம ஒழுக்கத்தைப் பெற வேண்டும். இதற்குக் கரண ஒழுக்கம் இன்றியமையாதது. அதாவது மனதைச் சிற்சபையின் கண்ணே நிறுத்தல்; அதா வது புருவமத்தியில் நிற்கச் செய்தல்; ஜீவதோஷம் விசாரியா திருத்தல்; தன் இன மதியா திருத்தல்; இராகாதி நீங்கிச் சத்துவ மயமாதல்; தனது தத்துவங்களே அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் முதலியன”. இவ்விரண்டு ஒழுக்கங்களேயும் நன்கு பற்றி வாழும் ஒருவன் எப்போதும் சலிப்பில்லாமல் நான் சாக மாட்டேன் என்ற முழு நம்பிக்கையுடன் ஆண்டவன் அருள் நோக்கி இருக்கவேண்டும். அருள் வடிவாய் என்பது இங்கே நிஜனப்பு மறப்பு அற்ற நிலையில் இருப்பது ஆகும். இந் நிலேயில் அவனுக்கு ஆண்டவனது திருவருள் நிறைந்து வரும். அவனது உடமபு சுத்த தேகமாக - பொன்னுருவமாக - மாறும். தேக மாற்றத்தை அடிகள் மற்ருெரிடத்தில் விளக்குகின்றனர். நமது உடம்பு தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம். சுக்கிலம் முதலிய அசுத்த பூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகி உள்ளது. அவற்றை யெல்லாம் சுத் த பூதகாரிய அணுக்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப் போது, நரை, திரை, மூப்பு இவற்ருல் நலிவுறும் நமது அகத்த தேகம் சுத்த தேகமாக மாறும். அது மாற்றுரைக்க முடியாத பொன் னுருவம். என்புருப்பொன் னுருவாக்க எண்ணிவரு கின் ருர் என்று திரு நாத ஒலி இசைக்கின்றதம்மா (6, 82, 40) என்பது எண்ணத்தகும். இந்த மாற்றம் பர உபகாரம், சத் விசாரம் என்ற இரு செயல்களால் தான் கை கூடும். அப்போது உடம்பில் உண்டாகும் மாற்றங்களே அடிகள் தமது அமுதொழுகு தீஞ்சொற்களால் அறிவித்துள்ளனர் (V1; 1440-1354). இந்த மாற்றங்களில்ை விளைந்த சுத்ததேகம் திருவருட் பூரணத்தினுல் பிரணவ தேகமாக மாறும். இத்தேகம் சுத்த பூத காரண அணுக்களால் ஆயது என்று அடிகள் விளக்குகின் ருர்கள். இதனைக் கண்ணுல் காணமுடியுமேயன்றி பரிசித்து அறிய முடியாது. இதற்கு ஒமயத் திருவுரு என்றும் பெயர். இத்தேகத் தில் திருவருள் அனுபவமாகும். இத்திருவுருவில் இருந்துதான் 348

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/356&oldid=743497" இலிருந்து மீள்விக்கப்பட்டது