பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுந்தான், போதிலார் திருவிள்ை புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறமி வள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்மன்னே ? எனவும், “ வடு நீங்கு சிறப்பின் மனையகம்” எனவும். இளங்கோவடிகளே கண்ணகியைப் பற்றிக் குறிப்பிடுகின் ருர் ஆதலால், கண்ணகியிடம் குறை இருந்ததாகக் கருதுவதற்கே இடமில்லை. எனவே கண்ணகியிடமிருந்த குறை காரணமாகப் பிரிந்தான் என்பதும் பொருந்தாது. கலை யடிப்படையில் கோவலன் மாதவி தொடர்பு ஏற்பட்டது என்பதற்கு ஒரு குறிப்பையும் காணுேம். பெருஞ் செல்வன் கோவலன், நகர நம்பியர் திரிதரும் மறுகில் போகிருன். மாதவியைக் கூனி ஏலம்’ போடு கிருள். மாதவியைப் பெறுதற் குக் கலேயார் வம் இருக்கவேண்டும். அழகுடன் இருக்க வேண்டும்; திருமணம் ஆகாதிருக்கவேண்டும். என்பன போன்ற நிபந்தனைகள் எவற்றையும் கூனி பம்மாள் குறிப்பிடவில்லை; அவள் குறிப்பிடுவதெல்லாம் விலே மட்டும்தான்; அவ்விலே கருர்’ விலே; அவ்வளவுதான். ஆயிரத்தெட்டு கழஞ்சு பெறுவது இம் மாலை; இம்மாலே வாங்குவோர் மாதவிக்குப் போதுமானவர் ஆவர் என்பதே. அவ்வழியாக வந்த கோவலன் மாலேயை வாங்கிக் கொண்டான்; மாலேயுடன் அப்படியே புறப்பட்டான் ; அவ் வளவுதான். கையில் பொன் இருந்தது முதல் காரணம்; அக் காலச் சமுதாயத்தில் அரசர் முதல் பெருஞ்செல்வர் யாவரும் மெற்கொள்ளும் பரத் தையர் ஒழுக்கம் இருந்தது இரண் டாவது காரணம். இவ்விரு காரணங்களே கோவலன் மாத வியை அடைவதற்கான காரணங்கள் என்பது தெளிவாகும். 354

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/362&oldid=743504" இலிருந்து மீள்விக்கப்பட்டது