பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் சென்னைப் பல்கலைக்கழகம் மொழி மக்கள் மனத்தினைப் படம் பிடித்துக் காட்டும் a show storsorih. (The Psychology of Language p 90). மொழி எண்ணத்தை வெளிப்படுத்தும் கருவியாக அமைவதல்ை அம்மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக் கூறுகளை எடுத்து மொழியும் பெற்றியுடன் திகழ்கின்றன. தமிழ் மொழியின் கண் சிறப்புற்றுத் திகழும் பழைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் அக்கால மக்கள் வாழ்வியலின வளமுறக் காட்டி நிற்கும் கருத்துக் கருவூலங்களா கும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் எனக் கூறப்படும். இப் பழம் பெரும் இலக்கியங்கள் இயற்கைப் பின்னணியிற், பெருவாழ்வு வாழ்ந்த தமிழ் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டு கின்றன. மனிதனின் வாழ்க்கைக் கூறுகளில் சமயத்திற்குத் தனி யானதோர் இடம் உண்டு. மனிதனைப் பக்குவப்படுத்தும் நெறிக்குச் சமயம் என்று பெயர். மக்கள் உயரிய குறிக்கோளோடு விழுமிய வழியில் செல்லச் சமயம் உதவுகின்றது. தமிழர்க்குக் கடவுள் நம்பிக்கையும் அதனுல் கடவுள் வழிபாட்டு நிலையும் இருந்தனவாக அறிகிருேம். பின்னாளில் தென்டுை வந்த ஆரியர் வருகைக்கு முன் ல்ை தமிழர் தம் சமய வாழ்க்கை ஒரு தனிமை யான் பண்போடு திகழ்ந்ததாகக் கூறுவர் (தமிழர் சால்பு ப. 106). தொடக்கக் காலத்தில் ஒருவித அச்சத்தோடு கடவுள் வழி பாடு தொடங்கியிருக்கக் கூடும். 355

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/363&oldid=743505" இலிருந்து மீள்விக்கப்பட்டது