பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறு உம் என்ப ’ (குறுந் 87) என்ற கபிலர் பாடல் இக் கருத்தினே வலியுறுத்தும். வரலாற் றுக்கு எட்டாத பழங்காலத்தில் தெய்வத்தை வாழ்த்தி வழிபடும் முறைகள் இயற்கையோடு வாழ்வு இயைந்த முறையில் அமைந் திருந்தன. ம8லயும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்த மக்கள் வெறியாட்டு முதலிய விழாக் களில்ை தெய்வங்களே வழுத்தி மகிழ்விக்கும் அளவிலேயே தமிழர் சமயம் அமைந்திருத் தல் கூடும்?, என்றும் காலஞ் செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியருக்குரிய கிரியை முதலியவற்ருல் மறைக்கப் பட்டு ஒழிந் தன’ என்றும் பேராசிரியர் டாக்டர் சு. வித்தியானந்தம் அவர் கள் குறிப்பிடுகின் ருர்கள். ( தமிழர் சால்பு ப. 106). சங்க காலத்தே குறிஞ்சி நில மக்களிடத்தே வெறியாட்டு என்னும் வெறிக் கூத்து மிகப் பெரிதும் பரவியிருந்தது. ‘வெறி' என்னும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும் (கலேக் களஞ்சியம் IX-505). முருகனுக்கு இயல்பாய நறுமணத்தை வெறி' என உரைப்பர் (அகம் உரை ப 231). இது குறித்தே சங்க காலப் புலமைச் சான் ருேராகிய நக்கீரனரும் திருமுருகனைக் குறிப்பிட வந்த விடத்து ‘மணங் கமழ் தெய்வத் திள நலம் காட்டி என்று குறிப்பிட்டுள்ளார் தெய்வம் மக்கள் மீது வந்து ஆடுவதை வெறியாட்டென்று வழங்குவர். சங்க இலக்கியங்களில் முருக வழிபாடு கூறப்படும் இடங்களிலெல்லாம் “வெறி யாட்டு எனப்படும் இத்தகைய கூத்துக் கள் வருணிக் கப்பட்டுள்ளன. வழிபடுவோர் தெய்வம் தம்மிலே வந்து வெளிப்படும் என்னும் நம்பிக்கை யு டன் கூத் தாடினர். தொல்காப்பியனர் கூறும் இலக்கணம் தொல்காப்பியனர் தம் பொருளதிகாரத்தில், ' வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் ” (புறத். 60) 356

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/364&oldid=743506" இலிருந்து மீள்விக்கப்பட்டது