பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியாட்டு நிகழும் சூழ்நிலை தலைவன் மாட்டுத்தன் நெஞ்சம் நெகிழ்ந்து அவனிடத்து ஆராக் காதல் கொண்டு வாழும் தலைவி, சில நாள்களில் தலைவனைச் சந்தித்துப் பேச முடியாதுபோயின் கவல்வாள்; தலைவனப் பிரிந்திருக்க முடியாத தலைவி உடல் மெலிவாள். தலைவியின் மேனியிலே தோற்றிய வேறுபாடு கண்ட தாய் முதலியோர் அவ்வேறுபாடு எதல்ை ஏற்பட்டதென்று ஆராயப் புகுவர். நெல்லே முறத்தில் வைத்துக் குறிபார்ப்பவளாகிய கட்டுவித்தியை அழைத்து வந்து கட்டு பார்ப்பர். அவ்வாறு அவள் தெய்வங்களேப்பாடி அழைத்து நித்தம் பார்க்கும் தலைவி, தலைவனிடத்துக் கொண்ட காதலே எவ்வாறேனும் தாய்க்கு அறிவித்துவிட வேண்டும் என்று எண்ணங் கொண்ட தோழி அவ்வகவன் மகளே அணுகுகின்ருள். அவள் ஒவ்வொரு மலையாக வருணித்துப் பாடிவிட்டு, தலைவன் வாழும் குன்றத்தை யும் பாடி முடித்தவுடன், மீண்டும் ஒருமுறை தலைவனின் குன்றத் தையே பாடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிருள். இதல்ை தாயர் முதலியோருக்குத் தலைவியின் காதல் நெஞ்சமும் வாழ்வும் தெரியவருகின்றன. (குறுந் , 23). வேலன் வெறியாட்டயர்தல் தலைவியின் உடலில் வேறுபாடு கண்ட தலேவி முருக கோயிற் பூசாரி படிமத்தான் எனப்படும் வேலனை அழைத்துத் தலைவியின் நோய்க்குரிய காரணத்தை வினவுவாள். வேலன், குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே யாதலால் இது முருகலைாய தென்று கூறு வான். முருகனுக்குப் பலிகொடுத்துப் பூசனை புரியின் தலைவியின் நோய் நீங்குமென்பான். முருகனை விளேயாட்டயர வேலன் புஜனயும் வெறியயர் களம் மிகவும் அழகுறப் புனையப்பெறும் குறுந்தொகையில் இரு பாடல்களில் இவ் வெறியயர் களம் பற்றிய குறிப்பு உண்டு. (53, 318). வெறியாட்டில் வேலன் ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள வெறிப் பத்து என்னும் பகுதி யில் தலைவியின் பொலிவற்ற தோற்றத்திற்கு முருகனே காரணம் 358

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/366&oldid=743508" இலிருந்து மீள்விக்கப்பட்டது