பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ் வழக்கு, பண்டைய காதல் ஒழுக்க த்தின் ஒரு துறையினை யும் ஒளியாமல் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். தோழி வெறியாட்டு எடுக் கும் பொழுதும், தலேவி மெலிந்து வாடி வேறு பட்ட நிலையில் தாய் ஐயுறும் பொழுதும், தமர் தலைவனுக்கு வரைவு மறுக்கும் பொழுதும், நொது மலர் வரைவின் போதும், கட்டுக் கானிய நின்ற விடத்தும், கூட்டம் உண்மையினத்தாய் அறிந்தவிடத்தும் முன் னிலைப் புறமொழிகளால் அறத்தொடு நிற்பாள். எனவே, வெறியாட்டு என்பது தோழி அறத் தொடு நிற்றலுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது என்றும், தலைவி மாட்டுத் தலே வன் கொண்ட காதலைச் சத்துவம் தோன் றத் தெருவிப்பதற்கு ஒரு வாயிலாக அமைகிறது என்றும் கூறலாம். சுருங்கக் கூறின், பண்டைத் தமிழ் மக்களின் அகத் தினே ஒழுகலாற்றின் ஒரு கூறினே வெறியாட்டு விளங்கவுரைத் து நிற்கிறது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/368&oldid=743510" இலிருந்து மீள்விக்கப்பட்டது