பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனுத்திறமும் இளங்கோ கலைத்திறமும் திரு. பி. செளரிராசன் திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி அச் சத்தோடு அல்லது ஆர்வத்தோடு ஒன்றை எதிர்பார்ப் பதற்குக் கருவியாகவும், பின் நிகழப் போவதை முன் கூட்டியே ஒரளவு குறிப்பாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் கதை யையோ காவியத்தையோ நடத் திச் செல்வதற்கு உரிய ஒரு கலே நுட்பமாகவும் கனவை இலக்கியச் சான்ருேர் கையாண் டுள்ளனர். சூலிய சீசர் நாடகத்தில் கலிபூர்னியா கண்ட கனவு அச்சத்தோடு சீசரின் முடிவை எதிர்பார்க் குமாறு கற்பாரைத் துாண்ட க் காரணமாக அமைந்துள்ளது இராமாயணத்தில் திரிசடை. கண்ட கனவு இராமனின் வெற்றியை ஆர்வத்தோடு எதிர்பார்க்கச் செய்கிறது. துறக்க நீக்கத்தில் ஈவ் என்பான் காணும் கனவு பின் வரும் நிகழ்ச் சிகளே முன் கூட்டி யே ஒரளவு அறிந்துகொள்ளத் துணையாக அமைந்து விளங்குகிறது. இவ்வாறு கனவைக் கருவியாக க் கொண்டு கதையை நடத்திக் செல்லும் இலக்கிய நுட்பத்தை இளங்கோ அடிகளாரும் திறம்பெறக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். m கோவலன் கண்ட கன வும், கோப்பெருந்தே வி கண்ட கனவும் அச்சத்தோடு ஏதோ ஒரு கொடிய நிகழ்ச்சியைக் காண, கண்டு பின்பு மனங் கலங்காமல் உறுதிபெற முன் கூட்டியே கற்பாரை ஆயத்தம் செய்து விடுகின்றன. ஆல்ை கண்ணகி கண் - கனவை இளங்கோ அடிகள், இலக்கியப் பேராசிரியர் எ வரும் கையாளாத அளவு திட்ட த்தோடும், தெளிவோடும், 36 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/369&oldid=743511" இலிருந்து மீள்விக்கப்பட்டது