பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шама М அதிகா ரங் கள் அருமையிற் கூடல், அடுத்த 11. அதிகாரங்கள் பிரிந்து கூடல், இறுதி 4 அதிகாரங்கள் ஊடிக் கூ - ல் க்கொள் வர். பரிமேலழகர் களவியல், கற்பியல் எனக் கொண்ட பகுப்பு தமிழ் அகத்திணே மரபுக்கு ஏற்றதாகும். காங் வனமாயினும் அதிகார வைப்பில் மாற்ற மின்மை பெறப்படும். வ 133 அதிகார வைப்பும் தொன்று தொட்டு வருவதென்பது அறியத் தக் கதா கும். ஆயினும் இயல்களின் பெயர், எண்ணிக்கை யிலும் , அதிகாரப் பெயர்களிலும் மட்டும் சிற்சில வேறுபாடுகளே ஒவ்வொருவரும் பின் பற்றியுள்ளனர். ஒரதிகாரத்துள் அடங்கும் பத்துக் குறள்களேயும் பற்றிய வைப்பு முறையில் ஒவ்வோராசிரியரும் ஒவ்வொரு முறையைப் பின் பற்றி புள்ளனர். குறள் வைப்பு முறையில் எது தொன் மை யானதென்று அறிதல் அரிதாக வுளது. மணக் குடவர் கைக் கொண்டுள்ள முறை யை விடப் பரிமேலழகர் கைக் கொண்டுள்ள முறை பெரிதும் பொருத்தமுடையதாய்த் தோன்றுகிறது. “பரிமேலழகர் தாமே சிந்தித்து இவ்வளவு சிறந்த வைப்பு முறை யை அமைத்த ரா? அல்லது திருவள்ளுவரின் மூல நூல் முறை எதுவும் அவர்க்குக் கிடைத்ததா? என்று ஐயப்படுமளவு பரிமேலழகர் கொண்ட முறை சிறந்து விளங்குகிறது. பரிமேலழகரின் வைப்புமுறைச் சிறப்பினே அறியக் கீழ் வரும் சில எடுத்துக்காட்டுக்க ளேக் காணலாம் : (அ) அறத்துப்பால்- ஒ ப்புரவறிதல் (22): 'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாள ன் திரு” (பரி:5-மண :60பரிதி:3) 'பயன் மரம் உள்ளுர்ப் பழுத்தற்ருல் செல்வம் நயனுடை யான் கட் படின்’ (பரி:6-மன:7-பரிதி:4) “மருந்தா கித் தப்பா மரத் தற்ருல் செல்வம் பெருந்த கை யான் கட் படின்” (பரி:7-மண:5-பரிதி:5) இதன் கண் பரிமேலழகர் 5, 6, 1 ஆகக் கொண்ட குறள் களே ப் பரிதியார் 3, 4, 5 ஆக க் கொண்டுள்ளார். மணக் குடவர் 367

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/375&oldid=743518" இலிருந்து மீள்விக்கப்பட்டது