பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, 4, குறள்கள்: இவை மூன்று பாட்டானும் இல் நிலேயில் நின் ருன் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது ” (, 7, 8, 9 குறள் கள்: ' இவை நான்கு பாட்டா னும் இல் நிலையே பயனுடைத்தென இதன் சிறப்புக் கூறப் பட்டது.” 10 ஆம் குறள்: "இதல்ை இல் நிலையது மறுமைப் பயன் கூறப் பட்டது”. எனவே, திருவள்ளுவரே கொண்ட முறையோ என ஐயுறு மளவு பரிமேலழகரின் முறை வைப்பு அமைந்துள்ளது. இறுதிக் குறளாகப் புலத்தலில் புத்தேள் நாடுண்டோ” ((323) என்ற குறளே மனக் குடவர் , பரிப்பொருள், காலிங்கர் மூவரும் அமைத் தனர். பரிமேலழகர் ஊடுதல்...பெறின்” என்ற குறளே 1330 ஆம் குறளாக வைத்தார். அகரமுதல னகர இறுவாய்' என்ற தமிழ் நெடுங் கணக்கு முறைக் கொப்ப அமைந்த இக் குறள் வைப்புப் பெரிதும் போற்றத் தக்க தன் ருே? சிலர் தொல்காப்பியர் குறிப் பிட்ட எழுத்தெனப்படுப அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென் ப...” (எழுத்து : 1) என்ற பகுதியை நினேவிற் கொண்டே, திருவள்ளுவர் இங்ங்னம் பாடினர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சு என்ற அதிகாரத்தின் முதற்குறள், கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு” என்பதாகும். அமைச்சனுக்குக் கருவி, காலம், செய்யும் முறை, செய்யும் அரிய செயல் என்பன மாட்சி மையுடையவனுய் அமைய வேண்டும் என்று கருதுகிருர், திருவள்ளுவர். அடுத்து , 'வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள் வினையோடு ஐந்துடன் மாண்ட தமைச்சு” 369

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/377&oldid=743520" இலிருந்து மீள்விக்கப்பட்டது