பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை திரு. க. த. திருநாவுக்கரசு சென்னேப் பல்கலைக் கழகம் பண்டைக் காலத்தில் நாகரிகத்தின் கொடுமுடியில் வீறுடன் விளங்கிய நாடுகள் பல. அவை ஒவ்வொன்றும் தம்முடைய நாட்டின் அமைப்பிற்கும், தட்பவெப்ப நிலைக்குமேற்ப காலத் தைக் கணக்கிட்டு வந்துள்ளன. தமிழகமும் தொன்று தொட்டு இன்றுவரை யில் ஒரு வகையான காலக் கணக்கினேப் போற்றி வருகிறது, ஆனல், கடந்த காலங்கள் தோறும் அக்கணக்கு முறை மாற்ற முற்று வந்திருக்கிறது. அத்தகைய ஆண்டுக் கணக்கு முறையை நாம் இவ்வாய்வுரையில் காண்போம். அறுவகைப் பருவங்கள் தொல்காப்பியர் ஒரையும் நாளும் (கிளவி, 44) என்று குறிப் பிடுவதனுல் விண்ணில் கோள்களின் வீட்டுத் தொகுதியைப் (Signs of Zodiac) பண்டைத் தமிழர் வரையறுத்து இருந்தமை புலனுகின்றது. ஞாயிறு திங்கள்’ (கிளவி 58) என்பதனுல் ஏழு கோள்களேப் பற்றிய அறிவும், அவற்ருல் பெயர்பெறும் ஏழு கிழமைகளேயும் நெறிப்படித்தி இருந்தமை தெரிகிறது. ஆனல், அக் காலத்தில் ஒர் ஆண்டினே அவர்கள் அறுவகைப் பருவங் களாகப் பகுத் திருந்தனர். இன்று நாம் பன்னிரண்டு திங்கள் களாகப் பாகுபடுத்தி உரைக்கும் முறை தொல் காப்பியர் காலத் தில் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. நாளடைவில் திங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடும் முறை வளர்ச்சியுற்றது 376

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/383&oldid=743527" இலிருந்து மீள்விக்கப்பட்டது