பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபது ஆண்டுகள் இன்று தமிழ் நாட்டில் அறுபது ஆண்டுகளேக் கொண்ட ஒரு வகைக் கணக்கு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. பிரபவ முதலாக அகூடிய ஈருக இவ்வறுபதாண்டு வட்டம் சுழன்று வருகிறது. கடந்த சில நூற்றண்டுகளாக இவ்வாண்டுக் கணக்கு முறையே தமிழ் ஆண்டுக் கணக்கு முறையாகப் டோற்றப்பட்டு வருகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களுள் ஒன்று கூடத் தமிழ்ப் பெயராக இல்லை என்பது அறிஞர்கள் அறிந்த உண்மை. மற்றும் குறிப்பிட்ட ஒர் ஆண்டு ஒருமுறை குறிக் கப் பெற்ருல், பின்னர் அறுபதாண்டுகள் கழித்து அதே பெயருடைய ஆண்டு வந்துவிடுகிறது. முந்நூறு ஆண்டுக் காலத்தில் குறிப் பிட்ட ஒராண்டு ஐந்து முறை சுழன்று வருகிறது . இத்தகைய காலக் கணக்கு முறை கி. பி. பதினேந்தாம் நூற்ருண்டுவரை தமிழகத்தில் வழக்கத்தில் இல்லே! குலசேகரன் என்ற பராக்கிரம பாண்டியனுடைய செங்கோட்டைச் சிவன் கோயில் கல்வெட்டில் (யானறிந்த வரையில்) முதன் முதலாக இந்த அறுபதாண்டுக் காலக் கணக்கு முறை இடம் பெற்றுள்ளது எனலாம். இக் கல்வெட்டில் பொறிக்கப்பெற்ற காலம் கி. பி. 1545 <abb aborstr_r&gth (Tra. Arch. Survey Vol I, No. VI P. 103-4) இக் கல்வெட்டில் விசுவாவசு ஆண்டுக் குறிப்பிடப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அறுபது ஆண்டு வட்டத்தில் முப்பத்தொன்பதா வது ஆண்டாகும், இக் கல்வெட்டுத் தென் இந்தியாவில் விசய நகரப் பேரரசு சிறப்புற்று விளங்கிய காலத்தில் பொறிக்கப் பெற்றது. அப்பேரரசு காலத்திய கலவெட்டுக் களில் இந்த ஆண்டுக் கணக்கு முறை வழக்கத்திற்கு வந்தமை புலனுகின்றது . இந்த அறுபதாண்டுக் கணக்கு முறைக்கு மாருக த் தொண் ணுாறு ஆண்டுகளடங்கிய கோள்களின் சுழற்சி வட்டம் ஒன்று தென்னிந்தியாவில் வழக்கிலிருந்ததாக வீரமாமுனிவர் குறிப்பிடு கிருர், இதைப்பற்றி பிரின் சப் என்பவர் “இந்தியப் பழமைகள்' என்ற குறிப்பேட்டில், செவ்வாயின் 25 வலஞ்சுற்று மண்டலங்கள், புதனின் 22, வியாழ 380

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/387&oldid=743531" இலிருந்து மீள்விக்கப்பட்டது