பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னின் 11, வெள்ளியின் 5, சனியின் 29 ஞாயிற்றின் 1 வலஞ் சுற்று வட்டங்கள் ஆகியவற்றின் நாள் எண் ணிக்கையின் பெருக்கமாக அமைந்தது என்று தெரிய வருகிறது. இதன் தொடங்கு கட்டம் கலியூமி 3078 ஆம் ஆண்டு முடிவில், அதாவது கி. மு. 24 இல் நிகழ்ந்தது. ஆண்டுக் கணிப்பு ஞாயிற்று முறை அல்லது வான் மீன் முறைப்படியமைந்த து எந்த மேலே யாண்டுக்கும் எதிரான இவ்வாண்டு எளிதிலே 24 ஐக் கூட்டி 90 ஆல் வகுத்துக் காட்ட முடியும். எடுத்துக்காட்டாக கி. பி. 1830க்கு 1830 உடன் 24 கூட்ட 20 வட்டங்கள் 54 ஆண்டு as sir Gaol – iš Sub (Prinseps Indian Antiquities, Vol. II p. 158). இந்த அறுபது ஆண்டுக் கணக்கிற்கும் தொண்ணுாறு ஆண்டுக் கணக் கிற்கும் இடையே உள்ள தொடர்பு யாதென் பதை இன்று ஆராய்ந்து அறிய இயலவில்லை. இந்த அறுபதாண்டு காலவட்டத்தின் ஆண்டுத் தொடக்கம் சித் திரைத்திங்கள் முதல் நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது. இன்று நாம் சித்திரைத் திங்களின் தொடக்கமாகக் கணக்கிடும் நாளிலே ஒரு சிறு குறை இருந்து வருகிறது. தென் குட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கி. பி. எழாம் நூற்ருண்டில் வராகமிகிரர் வகுத்துத் தந்த காலக் கணிப்பை இன்னும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். அதல்ை 23 நாட்கள் நம்முடைய காலக் கணக்கில் பிற்பட்டதாகி இருக்கிறது. இக்குறையை ஐம் தாண்டுகளுக்கு முன்பே தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் சுட்டிக் காட்டியுள் ளார்: வசந்த விஷ வானது மேஷராசி யின் ஆரம்பத்தில் இருந்த பொழுது உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கியது. அதற்கு அப்பால் கணக் குத் தவறிப்போய் விட்டது. அயன விஷூ க்களின் சலனத்தை அறியாமலே அறிந் திருந்தும் கவனி யாமலோ லம் வத்சரத்தின் பரிமாணத்தை 20 நிமிஷம் அதிக மாகக் கணித்து விட்டபடியால், அயன விஷ காலங்கள் வருவும் ஒன்றுக்கு 20 நிமிஷம் பிந்திவருகின்றன. 80 வருவத்திற்கு ஒரு நாள் பிந்தி விடும். மேற்படி நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றண்டுகளாகிவிட்டன. அதல்ை புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப் போய்விட்டன (பாரதியார் கட்டுரைகள் ப. 48). எனவே தமிழ் ஆண்டுக் கணக்கினைத் திருத்த வேண்டும். திருவள்ளுவராண்டுக் கணக்கு முறையைப் பொங்கல் திருநாளில் தொடங்குவதே சாலவும் பொருத்தமாகும். - so 381

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/388&oldid=743532" இலிருந்து மீள்விக்கப்பட்டது