பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றத்தினர். இறைச் சியை வேகவைத்து உண்பர். இலே களால் ஆன மாலே அணிந்திருப்பர். இவ் வருண னேகளிலிருந்து அறிவது இரண்டு உண்மைகள். கடற்கரையிலிருந்து நெடுந் தொலைவு தள்ளியிருக்கும் உள்நாட்டு நகரம், காடு சூழ்ந்த முல்லே நிலம். குறும்பொறை மலே ஒரு கூடுதல் அடையாளம். ஆமூர்கள் தற்போது தமிழகத்தில் ஆமுர் என்ற பெயரோடு பல ஊர் கள் உள்ளன. செங் கல்பட்டு மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகில் ஒரு ஆமூரும், அச் சிறு பாக்கத்திற்கு அருகில் சித்தாமூர் சிறு தாமூர் என்ற ஊர்களும் உள்ளன. மாமல்லே ஆமூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ஆமூர் நாட்டில் இருந்ததாகக் கல் வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. (S. 1. 1. Vol. No. 377) தென்ற்ைகாடு மாவட்டத்தில் பன்ருட்டிக்குப் பக்கத்தில் தாவுக் கரசர் தோன்றிய திருவாமூர் உள்ளது. தஞ்சை மாவட்டத் தில் நாகூரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் என ங் குடிக்கு அருகில் ஒரு ஆமூர் உள்ளது. சிறுபானற்றுப் படையின் பாட்டுடைத் தலே வன் நல்லியக் கோடனின் மூன்று பெருநகரங்களில் ஆமூரும் ஒன்று. நல்லியக் கோடன் தொண்டை மண்டலத் தலே வன் . மேலே கூறிய ஆமூர்கள் நல்லியக் கோடனின் ஆமூரிலிருந்து குடி பெயர்ந்த மக்களால் அமைத்துக் கொண்ட ஊர்களாக இருக்கலாம். மேலும் செங்கல்பட்டு, தென் குர்க்காடு, தஞ்சை முதலியன கடற்கரை மாவட்டங்களாதலால் அ வை கொடுமுடியின் ஆமூர் அல்ல எனத் துணியலாம். முசிரி ஆமூர் திருச்சி மாவட்டத்தில் குளித்தலே வட்டத்தில் முசிரி செல் லும் வழியில ஒரு ஆமூர் உள்ளது. இது உள்நாட்டு ஊர்தான். ஆனல் காவிரியின் அணேப்பால் வயல் சூழந்த மருதநிலம் . மேலும் அதன் மேற்கே மலேகள் ஏதும் இருந்த அடையாளமே இல்லே. 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/40&oldid=743546" இலிருந்து மீள்விக்கப்பட்டது