பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றவையேயாகும். உளரும், உணரும் என்னும் சொற்கள் எதிர்காலம் காட்டி நிற்கும் தெரிநிலை வினைமுற்றுச்சொற்களாகும். எனவே இயற்கைப் பொருளே இற்றெனக் கிளந்து சொல்லுதல் வேண் டும் என்பதே இலக்கண ஆசிரியர்கள் கருத்தாதல் உணரலாம். அங்ங்னம் கூறுங்கால் இற்றென்னும் பொருள்பட நிற்கும் தெரிநிலை வினையாலும் குறிப்பு வினையாலும் கூறப்பட லாம் என்றும் இன்ன வினையால்தான் கூறப்படுதல் வேண்டும் என்ற வரையறை இல்லை என்றும் அறிகின் ருேம். இதனைச் சேவை ைரயர் விளக்கமும் வலியுறுத்துகின்றது . சங்கரநமச்சிவாயர் இக் கருத்தினே மறுத்து, இற்றெனக் கிளந்து கூறுங் கால் குறிப்பு வினேயால் மட்டுமே கூறப்பெறுதல் வேண்டும் என்னும் பொருள்பட விளக்கம் வரைந்துள்ளார். வளியின் கண்ணும் உயிரின் கண்ணும் உளர்தலும் உணர்தலும் ஆகிய செயல் நிகழ்ந்த துணையானே அவற்றிற்கு அவை செயற் கையா மன்றி இயற்கையாகாமையானும் அவ்வாறு கூறுதற்கு ஒரு விதியின்மையா னும் அவை பொருந்தா என் க எனக் கூறுகிருர் . வளி உளர்தல் உயிர் உணர்தல் ஆகிய பொருள்களின் தன்மை விளக்கப்படுதலே இவண் இன்றியமையாதது என்பதை இற்றெனக் கிளத்தல்’ என்னும் தொடர் விளக்கி நிற்கவும், அவற்றைச் செயற்கை எனக் கொண்டு சங்கரநமச்சிவாயர் இடர்ப்படுவதும், தெரிநிலே வினேகளுடன் கூறப்பட்ட இவ் எடுத்துக் காட்டுக்கள் பொருந்தா என்று கூறுவதும் பொருந்தா. செயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் எங்ங் னம் கூறப்படுதல் வேண்டும் என்ற விதிகளைத் தொல்காப்பியர் செயற்கைப் பொருளே ஆக்க மொடு கூறல் (20) ஆக்கந் தானே காரணமுற்றே (21) ஆக்கக் கிளவி காரணமின்றியும் போக்கின் றென்ப வழக்கினுள்ளே” (22) எனவரும் நூற்பாக்களால் விளக்குகின் ருர். வழக்கினுள் காரணமின்றியும் வருமென வே செய்யுளுட் காரணம் பெற்றேவரும் என்பதாம்’ என்ற சேவைரையர் விளக் 395

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/402&oldid=743549" இலிருந்து மீள்விக்கப்பட்டது