பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் செய்யுளில் செயற்கைப் பொருள் கூறப்படும் விதியை உணர்த்தி நிற்கின்றது. நன்னூலார், வழக்கிற்குரிய விதிகள் செய்யுளுக் குரியவிதி கள் என்ற பாகுபாடுகளைக் கொள்ளாமல் காரண முதலா ஆக்கம் பெற்றும் காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும் இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள் (405-நூ). என நான்கு நிலைகளில் செயற்கைப் பொருள் வரும் எனப் பொது நிலையில் கூறியுள்ளார். வழக்காயினும் செய்யுளாயினும் இந் நான்கு நிலேகளில் செயற்கைப் பொருள் வரும் என நன் னுாலார் கூறியுள்ள பொதுவரையறை தெளிவுடையதாய் அமைந்து விளங்குகின்றது. ஆக்கக்கிளவி செயற்கைப் பொருளே ஆக்கக் கிளவியுடன் கூறுதல் வேண்டும் என்ற விதியில் ஆக்கமொ டு கூறல்” என்பது ஒரு பொருளின் திரிபை அதனை விளக்கும் சொல்லால் கூறுதல் என்று கூறலாம். இதனை ஆக்க மொடு கூறல் என்பதல்ை திரிபு கூறுதல் பெற்ரும்’ என்ற சேவைரையர் விளக்கமும், பிற உரையாசிரியர் கள் விளக்கமும் விளக்கி நிற்கின்றன. ஒரு பொருளின் திரிபை விளக்கும் சொற்கள் பலவாயினும் ஆக்கம்-என்ற சொல்லேயே அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் ஆகும், ஆயின; ஆயினன் போன்ற சொற்களே இங்கு ஆக்கக்கிளவி எனத் தொல்காப்பியரால் சுட்டப்பட்டவையாகும் என்பது அறியத் தக்கது. திரிந்தது, வளர்ந்தது திருந்தியது, கெட்டது, மாறியது போன்ற சொற்களும் ஒரு பொருளின் திரிபை உணர்த்தி நிற்பவை ஆயினும் இவை ஆக்கக் கிளவி என்ற பெயரால் தொல்காப்பியரால் சுட்டப்படவில்லே என்பதும் அறியத்தக்கது. ஆக்கம்-என்ற சொல்லே அடிப்படையாகக் கொண்டு ஆயிற்று, ஆகின்றது, ஆகும் என முக்காலத்தை உணர்த்தி 396

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/403&oldid=743550" இலிருந்து மீள்விக்கப்பட்டது