பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்புரை:- இக் கட்டுரையில் கூறப்பட்ட செய்திகளைப் (அ) (ஆ) (இ) ক্ষ) (உ) (ост) (ஏ) பின் வருமாறு தொகுத்துக் கூறலாம். தன்னியல்பில் திரியாது காரணமாய் நிற்கும் பொருள் இயற்கைப் ப்ொருள் என்றும் தன்னியல்பில் வேறு பட்டு நிற்பவை செயற்கைப் பொருள் என்றும் கூறப்படும். இயற்கைப் பொருளே இற்றென்னும் பொருள்பட நிற்கும் தெரிநிலை வினே யாலும் குறிப்பு வினேயாலும் கூறலாம்; தெரிநிலை வினேச் சொற்களால் கூறுதல் பொருந்தா து என்ற சங்கர நமச்சிவாயர் கருத்துப் பொருந்தாது . செயற்கைப் பொருள எங்ங்னம் கூறப்பெறுதல் வேண் டும் என்பதற்கு நன் னுாலார் கூறும விதிகள் சிறப்பாக அ ைமந்துள்ளன . ஆக்கம். என்ற பொருள் குறித்து நின்ற சொற்களே ஆக்கக் கிளவி எனத் தொல்காப்பியர் சுட்டி வில்லே. ஆக்கம் என்ற சொல்லடியாகப் பிறந்த சொற்களேயே ஆக்கக் கிளவி என ச் சுட்டியுள்ளார். ஆக்கக் கிளவி ஐம்பால் மூவிடத்திற்கும் முக்காலத்திற் கும் உரிய நிலை வினைச் சொற்களே யாகும். தொல் காப்பியர் கூறும் ஆக்கக் கிளவியும் நன்னூலார் கூறும் ஆக் கவினைக் குறிப்பும் வேருனவை; ஆக்கக் கிள் வி ப்ெற்ற குறிப்பு வினை ஆக் கவினைக்குறிப்பு எனச் சுட்டப்பட்டுள்ளது. ஆவென்னும் வினைக் குறிப்பு எனத் தெய்வச் சிலேயார் குறிப்பிட்டிருக்கும் சொல் ஆகும் என்பதன் இடைக் குறையாக உள்ள ஆம் என்னும் ஆக்கச்சொல்லி லிருந்து வேறுபட்டது. குறிப்பு வினை காலத்தைக் குறிப்பாக உணர்த்தி வருவ ன் த விளக்கவே பண்டு ஆக்கச் சொல் பயன்பட்டிருத் தல் வேண்டும், சேகுவரையர் காலத்திற்கு முன் வழங்கிய முக்காலத்தையும் உணர்த்தும் ஆக்கச் ச்ொற்களைக் குறிப்பு வினையோடு சேர்த்துக் கூறும் மரபு மறைந்து, சேவை ரையர் காலத்தில் எதிர்காலத் தேர்டு மட்டும் ஆக்கச் சொல் சேர்த்துக் கூறுதல் வழங்கியிருந்தல் வேண்டும். 400

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/407&oldid=743554" இலிருந்து மீள்விக்கப்பட்டது