பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த ஆமூர் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. (புறம் 80). சோழன் கோப்பெரு நற்கிள்ளி ஆமூர் மல்லனே வென்றதாகக் கூறப்படுகிறது. ‘வெல்போர்ச் சோழர் ஆமூர்” என்றும் ஐங்குறுநூறு (மருதம் 56) கூறுகிறது. எனவே முசிரி ஆமூரையும் தள்ளிவிடலாம். கொங்கு நாட்டு ஆனுார் கோவை மாவட்டத்தில், தாராபுரம் வட்டத்தில் நொய்ய லாற்றங் கரையின் வலது கரையில் ஆனுார் என்ற ஊர் உள்ளது. தற்போது பழைய கோட்டை என வழங்கப்படுகிறது. நல்ல சேருகுபதிச் சர்க் கரை மன்ருடியார் அவர்களின் சொந்த ஊர். சென் னிமலே, அரச்சலூர் மலேக ளின் தென் கிழக்கே அமைந் துள்ளது உள் நாட்டு ஊர். கீழ்பவா னிக் கால் வாய்கள் வரு முன்னர் காடுகள் நிறைந்த முல்லே நிலமாக இருந்தது. இந்த ஆ னுாரே கொடுமுடியின் ஆமூராக இருக்கலாம். அதை உறுதி செய்ய குறும்பொறை மலேயை அடையாளம் காணல் வேண்டும். குறும்பொறை குறும் பொறை என்ற சொல், தமிழ் இலக்கியங்களில் பொதுப் பொருளில் கரடு (ஐங்கு. 183) பொற்றை, பாலேநிலத்துார் (பெருங். 38; 117) ஆகியவற்றைக் குறித்து நிற்கிறது. முன்னர் கூறிய அகம் 159 ஆம் பாடலிலும் பதிற்றுப்பத்திலும் ஒரு மலேயைக் குறித்து நிற்கிறது (74), பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனே அரிசில் கிழார் பாடியது எட்டாம் பத்து. இவன் கரூரைத் தலைநகராகக் கொண் டு ஆட்சி செய்தவன். இவனது ஆட்சிப் பரப்பில் ஒரு பெரிய மலையை அடுத்துக் குறும்பொறை என்ற சிறிய மலே இருந்ததை அறியலாம். மான்கள் அங்கு மேய்ந்து திரிந்ததை அரிசில் கிழார் காட்டு கிறார். நல்லியக் கோடனைப் பாடுகின்ற நத்தத்தனர் சிறுபாற்ை றுப்படையில் கடை ஏழு வள்ளல்களே ப்பற்றிக் கூறுகிறார். அதில் குறும்பொறை நாடு குறிப்பிடப்படுகிறது. (சிறுபாண் 107-111). 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/41&oldid=743557" இலிருந்து மீள்விக்கப்பட்டது