பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் நிலைபெற்றது ஏன்? டாக்டர் வ. சுப. மாணிக்கம் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் தமிழிலக்கிய வரலாற்றில் தொல் காப்பியத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இன்றுள்ள எல்லா இலக்கியங்களும் இலக்கணங் களும் கூடுதலாகவோ குறைவாகவோ தொல்காப்பிய ஆதிக்கம் உடையன. காலம் பின்னே செல்லச் செல்ல அதன் சார்பு மிகுதி. கடந்த நாலந்து நூற்ருண்டுகளாக அதன் ஆதிக்கம் குன்றியிருந்தாலும், இந்நூற்றண்டில், ஊக்கம் உடையான் ஒடுக்கம் போல, மீண்டும் வீறு கொண்டு எழுந்திருக்கின்றது. இது தமிழ் வளர்ச்சிக்கு நற்குறி. தொல்காப்பியம் இலக்கண நூலா தலின் இலக்கியத்தைக் காட்டிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. அகமும் புறமும் தமிழுக்கே உரிய பொருளிலக்கியங்கள் என்று கருதப்பட்டமை யின், அவற்றைப் புரிந்து கொள்வதற்குத் தொல்காப்பியக் கல்வி வழி வழி இன்றியமையாததாயிற்று இப்பெற்றியைச் சங்க கால இடைக் காலப் புலவோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். மானுக் கர்க்கு உணர்த்தவும் செய்தனர். சங்கச் சில பாடல்கள் தொல் காப்பிய இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக யாக்கப்பட்டன என்று கருத இடமுண்டு. பல்சான் ஹீரே பல்சான் றீரே (புறம். 195) என்ற நரிவெரூஉத் தலையார் பாடலும், இனி நினைந்து இரக்கமாகின்று’ (243) என்ற தொடித்தலே விழுத்தண்டினர் பாடலும், நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்ருேள் (278) என்ற நச்செள்ளே யார் பாடலும் சில வஞ்சினப் பாடல்களும் இவ்வாறு தோன்றியன போலும். 406

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/413&oldid=743561" இலிருந்து மீள்விக்கப்பட்டது