பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் இளங்கோ சாத்தனர் திருத்தக்க தேவர் முதலான "இலக்கிய நூலாசிரியர்களும், ஐயரிைதர்ை நாற்க விராச நம்பி பவணந்தி அமிதசாகரர் முதலான இலக்கண நூலாசிரியர்களும் தொல்காப்பிய நீந்திகள் என்பது வெளிப்படை. இளம்பூரணர் சேவைரையர் பேராசிரியர் தெய்வச் சிலையார் நச்சினர்க்கினியர் மு. கலான உரையாசிரியர்கள் தொல்காப்பியச் செம்படவர்கள். தொல்காப்பியம் ஓர் இயக் கநூல் என்பதும், பின் வந்த மூலாசிரி யர்களும் உரையாசிரியர்களும் அவ்வியக்கத்தைப் போற்றி வளர்த்துள்ளனர் என்பதும் தமிழ் வரலாற்றில் தெளிய வேண்டிய ஒரு கருத்து. தழுவுருடை : தொல்காப்பியம் தோன்றிய நாள் தொட்டுப் புகழோடு இயங்கி வருவதற்கு ஏது என்ன? இலக்கணம் கூறுவதில் தொல் காப்பியர் மேற்கொண்ட தழுவு நடை என்பது என் கருத்து. மனித சமுதாயம் வளர்ந்து கொண்டே மாறுபடும், மாறுபட்டுக் கொண்டே வளரும். சமுதாயம் மாறிக்கொண்டு செல்லுவது போல, அச் சமுதாயத்துக்கு உரிய மொழியும் மாறிக் கொண்டு தான் செல்லும். குழந்தை எவ்வளவு ஊட்டம் பெற்ருலும், அது பிறந்த காலத்து உடனமைந்த முக்கியமான உடற்கூறுகள் மாறு படுவதில்லே ஒவ்வொரு குழந்தைக்கும் இஃது இயற்கை. அது போல ஒவ்வொரு மொழிக்கும் மாருச் சில பிறப்பியற்கைகள் உண்டு. அந் த இயற்கையில் கை வைப்பின் அம்மொழி கெட்டு விடும் அவ் வியற்கை கெடாது வரும் மாறுபாடுகளும் இயற் கையேயாகும். தொல் காப்பியர் மொழியின் நிலையியற்கை யை யும் அதற்குமேல் வரும் செயலியற்கையையும் செவ்வன் அறிந்தவர். வழிவழி வரும் செயலியற்கைகளேத் தழுவிக் கொள்ளா விட்டால் நிலையியற்கையும் கெட்டு விடும் என்பதனைத் தெரிந்தவர் ஆதலின் எதிர் கால வளர்ச்சிகளேத் தழுவிக் கொள்ளும் தழுவு விதிகள் பல யாத்தார். இந்நெகிழ்வு விதி களேப் புறநடை என்று சொல்லுவர் இலக் கணத்தார். அவை புற ந ைடயல்ல. மொழியைத் தடை செய்யாது காக்கும் புரநடை என்று மதிக்க வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் புற ந ைடயல்ல. 'வழுவல’ என்ற தன் கருத்து அதுவும் ஓர் இயற்கை என்பதாம். 407

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/414&oldid=743562" இலிருந்து மீள்விக்கப்பட்டது