பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லிய வல்ல பிறவவண் வரினும் சொல்லிய வகையான் சுருங்க நாடி மனத்தின் எண் ணி மாசறத் தெரிந்து கொண்டு இனத் திற் சேர்த் தி உணர்த்தல் வேண்டும் நுனித் தகு புலவர் கூறிய நூலே . (1610) இவை போன்ற தழுவு நடை நூற்பா இன்னும் பலவுள. * அன்ன பிறவும்', கிளந்த வல்ல என்ற தொடர்கள் தொல் காப்பியத்துப் பயின்று வரக் காணலாம். இயல்தோறும் அதிகாரந்தோறும் இடையேயும் தழுவு நடை அருது வருதலின், நீண்ட எதிர்கால உணர்வொடும் மொழிவளர்ச்சியைக் கால ந் தோறும் ஏற்றுக் கொள்ளும் நோக்கொடும் தொல்காப்பியர் நூல் யாத்தனர் என்பது தெளிவு. ஒர் எடுத்துக்காட்டு : எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே o உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (140) உடம்படுமெய் பற்றிய இந் நூற்பா எவ்வளவு நெகிழ்வினது? வழக்குப் பயிற்சி நோக்கி இ ஈ ஐ ஈறுகள் யகர உடம்படு மெய் பெறும்: அல்லன வெல்லாம் வகர மெய் பெறும் என்பர் இளம் பூரணர் ஏகாரம் யகரம் வகரம் இரண்டும் பெறும் என்றனர் நச்சிர்ைக் கினியர். திராவிட மொழிகளை ஒப்பு நோக்கிய கால்டுவெல் என்னமோ என மகர மெய்யும் காட்டின’ என ன கர மெய்யும் உடம்படுக்கும் என்பர். இவ்வாறு சொல்லப்படும் உடம்படு மெய்களே யெல்லாம் தழுவிக் கொள்ளும் வகையில் மேலே நூற்பா அமைந் திருக்கின்றது. உடம்படுமெய் என்று கூறிறைரேயன்றி இன்ன மெய்கள் என்று கூறிற்றிலர். விண்வத்துக் கொட்கும் எனச் சிறுபான்மை புள்ளியீறும் உடம்படுமெய் கொள்ளும் என்பர் நச்சினர்க்கினியர். வருமொழி உயிரீருக வேண்டும் என்று கிளந்தா ரேயன்றி, நிலேமொழிக்கு அவ்வாறு கூறவில்லே. எல்லா மொழிக்கும் என்ற தழுவு நடை புள்ளியீற்றை யும் உட்கோடல் காணலாம் சேர்த்துச் சொல்லும்போது தான் புணர்ச்சிகள் ஏற்படும். காலம் இடையிட்டுச் சொல்லுங் கால் புணர்ச்சி கட்டாயமில்லே இடி இடித்தது, மா அரைத் தான் என உடம்படு மெய் இன்றியும் வரலாம். வரையார்’ என்பதல்ை உடம்படு மெய்கோடல் ஒரு தலையன்று எனப் பூரணரும் இனி யரும் நெகிழ்வு நிலையை எடுத்துக் காட்டுவர். எனவே இவ் 409

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/416&oldid=743564" இலிருந்து மீள்விக்கப்பட்டது