பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வொரு நூற்பாவில் மூன்றிடங்கள் தழுவியலாக இருப்பது நினையத்தகும். உரையாசிரியர்கள் தொல் காப்பியர் தழுவு நடை மேற்கொண்டார் என்பது சிறப்பு. அதனினும் சிறப்பு அவ் விலக்கணத்தது தொல்காப்பியம் என்பதனேக் கண்டு அதற்கேற்ப உரையெழு தி ர்ைகள் உரை யாசிரியர்கள் என்பது . உரைகள் தொல்காப்பிய ஆலமரத் தின் விழுதுகள். இதல்ை இத்தொன் னுால் நிலை பெறுவதாயிற்று. தொல் காப்பியம் என் ன, முன்னுரல்கள் பல இடைக் காலத்து அழி யாது இன்று வரை நின்று வரக் காரணம் உரைத் தொடர் பேயாம். தமிழ் வரலாற்றில் மூல வரலாறு உரை வரலாறு என இரு கூறுகள் உள. பின்னது முன்னதற்கு நிகரானது, தாழ்ந்ததன்று. மூலாசிரி யர்கள் ஒப்ப உரையாசிரியர்களையும் போற்றுவது தமிழ் மரபு. மகத்துவம் வாய்ந்த அகத்தியன் , ஒல்காப்புலமைத் தொல்காப் பியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், பல்கலைக் குரிசில் பவணந்தி என் ருற்போல, உளங்கூர் கேள்வி இளம்பூரணர், ஆனப் பெருமைச் சே னு வரையர், உச்சி மேற் புலவர் கொள் நச்சி ர்ைக் கினியர் என வரும் சிறப்புப் பெயர்க்கிளவிகளே சான்று இடைக் காலம் என்பது உரைக் காலம் அன்று; தொன் னுரல்களே உரை யென்னும் கயிற்ருற் பிணித்த உயிர்க் காலம். ஒரு நாட்டுக்கு ஒருகாலத்து அரசியலமைப்பு வகுப்பர். காலந்தோறும் சில மாற்றங்கள் வரும்போது, விளக்க வகை யாலோ புதிய சட்டத்தாலோ திருத்தங் கொள்வர். இவ்வாறல் லது அடிக் கடி அரசியலமைப்பு வகுக்கும் வழக் காறில்லை. அப்படி இருப்பின் அந்நாடு நா டெ னப்படாது. அதுபோல மொழிக்கு இலக்கண நூல்களும் அடிக்கடி தோன்றுவதில்லே. தோன் றிய இலக்கண நூல் பன்னுாற்ருண்டுக்கு இடம் கொடுப்பதாக அமைய வேண்டும். இங்ாவன் அமைந்தது நம் தொல்காப்பியம். அதனு ற் ருன் இடைச் சங்கத்தில் எழுந்த தொல்காப்பியம் கடைச் சங்கத் துக்கும் உரிய நூல் என்று இறையனர் அகப்பொருளுரை மொழி யும். தத்தம் புது நூல் வழிகளால் புறநானுாற்றுக்குத் துறை கூறி ேைரனும், அகத்தியமும் தொல் காப்பியமுமே தொகைகளுக்கு நூல் எனவும், இத்தொடர் நிலைச் செய்யுள் (சிந்தாமணி) தேவர் 410

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/417&oldid=743565" இலிருந்து மீள்விக்கப்பட்டது