பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் எனவும் குறிப்பர் நச்சினர்க்கினியர். தொல்காப்பியர் நூலின் இறு தியில் முப்பத் திருவகை உத்தி மொழிகுவர். உரை செய்வார் இவ்வுத் தி நெறி களேப் பயன்படுத்தி மொழி நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கம் , சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையாது இயைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்பது உரையெனப் படுமே. ( 1603) என்ற நூற்பாவில்ை உரைசியா சிரியன் தன் கடமை விளங்கும். ஒரு நூற்பாவுக்குப் பொழிப்புரையெழுதிக் காட்டுத் தரும் அள வில் உரை முற்றுப்பெறுவதில்லே. உத்திகளின் வழி இயைந்தன வற்றை உய்த்துணர்ந்து காட்டி உரை வளர்ச்சி செய்ய வேண் டும். இது நூலாசிரியன் நம்பிக்கை . தொல்காப்பியம் ஆழ வேரூன்றி அகலப் பரவியதற்கு உரை யாசிரியர்கள் காரணம். அதனேவிட அன்னுேர் மேற்கொண்ட உரை முறைகள் பெருங் காரணம். இன்று வரும் தமிழாராய்ச்சி யில் உரையாசிரியர்கள் தகவிடம் டெ றவில்லே. உரைகள் ஆசிரி யனது கருத்தைக் காணுதபடி செய்யும் தடைக் கற்கள் எனவும், அறிவியலாக எழுதப்பட்டவையல்ல எனவும், ஒருவரோடு ஒருவர் தருக்குற்றுக் கலாம் செய்து மறுத்துத் திரித்து எழுதிய வழக் குரைகள் எனவும், தங்காலக் கொள்கைகளேயும் வழக்காறுகளே யும் இலேசிலுைம் மிகையிலுைம் கொண்டு வந்து புகுத்திய மறைகளே உரைகள் எனவும், உரைக்குறுக்கின்றி ஆசான் உள்ளத்தை மாண வரை நேரே காண விடுவதே முறை எனவும் உரைப்பழி அடுக் குவார் இன்று பலர் செய்யுட்களைப் பிரித்துப் படிக்கக் கூட வல்லாதபடி நற்றமிழரிடை தமிழ் என்ற ஒன்று வளர்ந்து வரும் இந்நாளில், உரையாசிரியர்கள் ஒதுக்கிடம் பெறு தல் இறும்பூதன் று. ஒழிவிடம் பெறவில்லே என்பது மகிழ்ச்சிக்கு உரியது. எழுதிய உரைகள் எல்லாம் தக்கன என்று யாரும் வாதிடார். யாவரும் இசையும்படி தகவுரை ஒருவரால் எழுத முடியும் என்று எவரும் எதிர்பாரார். உரைப்பூசல் நன்று; உரை யொதுக்கம் தீது. தொல்காப்பியப் பதிப்பு ஒரு தனி நூல் நிலைய 41 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/418&oldid=743566" இலிருந்து மீள்விக்கப்பட்டது