பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவுக்குப் பெருகும் வண்ணம் ஆக்கம் செய்தவர்கள் உரை யாசிரியர்கள் . இப்பணியில் நச்சிர்ைக் கினியரின் தொண்டு சாலப்பெரிது. இவர் ஒருவரே பல்லும் நாவும் போல இலக் கன வுரையாசிரியராகவும் இலக்கியவுரையாசிரியராகவும் இணைந்து விளங்கும் பெருமகன். இவர்தம் கலித் தொகை, பத்துப்பாட்டு, சிந்தாமணியுரைகள் தொல்காப்பிய அறிவின்றி விளங் கா. மருமகன் வலந்ததும் மங்கை யாக்கமும்’ (187) என்ற சிந்தா மணித் தொடருக்கு, ஆக்கம் - கிளவியாக்கம் போல் நின்றது எனவும், மங்கை அவனிடத்து அன்பை அமைத்துக் கோடல் எனவும் உரைப்பர் நச்சி குர்க்கினியர். தொல் காப்பியத்தைப் புதுக் காப்பியமாக இலக்கியம் எங்கும் நடமாட விட்டவர் இவ்வினியர். உரைமுறைகள் : தொல்காப்பிய நிலைபேற்றுக்கு உரை முறைகள் பெருங் காரணம் என்றேன். அம்முறைகள் மூன்று: 1. நூற்பாவிற்கு ஏற்ற உரையெழுதியமையும் இயல்புரை. 2. உரையாசிரியர்கள் நூலாசிரியனுக்குப் பின் தங்காலம் வரை வந்த வழக்காறுகளே ஏற்ற இடத்தில் தந்து முடிக் கும் இயைபுரை. 3. உரையாசிரியர்கள் கால வயப்பட்டுப் புதிய கொள்கை களே ஏற்றிக் கூறும் காலவு ைர. இயல்புரை :- இவ்வுரை முறைபற்றி வாதிடு இல்லே. பதவுரை பொழிப்புரை கருத்துரை சொல்லி நூற்பாவுக்கு ஒத்த உதாரணம் காட்டில்ை போதும். இவ்வுரை எளிய உரைபோல் தோன்றினும் எல்லா நூற்பாக்கட்கும் இவ்வுரை எழுதிவிட முடியாது. ஆசிரியன் கருத்து இதுவெனத் தெளிவாகத் தெரிந் தால் இவ்வுரை வரைய முடியும். கருத்துக் காண்பதுதானே கடினம். இயைபுரை :- உரையெனத் தொல்காப்பியர் கருதுவது இவ்வுரையே. தழுவு நடையது தொல் காப்பியம் ஆதலின் ஒழி வழக்கையும் எழு வழக்கையும் அழிவழக்கையும் இழி வழக்கை 412

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/419&oldid=743567" இலிருந்து மீள்விக்கப்பட்டது