பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் எல்லாம் ஆய்ந்து தழுவ வேண்டிய நூற்பாவைத் தழுவிச் சொல்வது உரை வளர்ச்சி. ஒர் காட்டு.

பெண்மை யடுத்த மகனென் கிளவியும்’ (தொல்: 469) பெண் 8ணப் பெண்மகன் என்று ஆண்பால்படச் சொல்லுகின்ற வழக்கை இத்தொல்காப்பிய அடி குறிக்கின்றது. இப்பகுதிக்கு வரைந்த உரை வளர்ச்சியைக் காண் போம்

(அ) இளம் பூரணர்:- புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத் துப் பெண்பாலாரைப் பெண் மகன் என்று வழங்குப. (ஆ) சேனவரையர்:- புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளே மாருேக்கத்தார் இக் காலத் தும் பெண்மகன் என்று வழங் குப. (இ) கல்லாடர் :- நானுவரை இறந்தாள் தன் மையளாகிப் புறத்துப்போய் விளையாடும் பெண்மகளேப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனே இப்பொழுது மாருேக்கத்தார் வழங்குவர். மாருேக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு . (ஈ) தெய்வச்சிலே யார்:- விளையாடு பருவத்துப் பெண் மகளைப் பெண் மகன் என்றல் பண்டை யோர் வழக்கு, (உ) நச்சிஞர்க்கினியர்:- பெண் மகன் என்பது அத்தன்மை யாரை அக் காலம் அவ்வாறே வழங்கினர் ஆயிற்று, இங்ங்னம் கூறலின். பெண்மகன் என்பது இளம்பூரணர் காலத்து நாடு முழுவதும் பரவலாக வழங்கியிருந்தது என்பதும், சேவைரையர் கல்லாடர் காலங்களில் திசை வழக்காயிற்று என்பதும், சிலேயார் இனியார் காலத்து அத்திசை வழக்கும் அருகிற்று என்பதும் பெறப்படும். தொல்காப்பியவுரைகளே இரு வ ைக ப் படு த் தி க் கற்க வேண்டும் 1. தொல்காப்பியர் கால இலக்கணம். 2. உரையா சிரியர் கால இலக்கணம் என.. இன்று நமக்கு இருவகை இலக் கணமும் வரலாற்று மொழியியலாகப் பட்டாலும், உரையிலக்க ணம் என்பது உரையாசியர் காலத்துத் தன்மை மொழியியலாகும். 413.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/420&oldid=743569" இலிருந்து மீள்விக்கப்பட்டது